ஆரோவில், பாண்டிச்சேரியின் அருகே அமைந்துள்ள மிக அழகிய நகரம். இது பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 8கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்த நகரம், இன்னும் தனது இயற்கை சூழ்நிலையில் இருந்து மாறாமலும் மற்றும் அமைதியாகவும் இருக்கிறது.

IMG_20161204_162611
சுவாமிநாதன், சுவாமிநாதன் மகள் ஷாமினி, தாஜூதீன், தாமஸ்ராஜ், தவமணிகண்டன் மற்றும் முகமது யகையா

நான் மற்றும் நண்பர்களுடன் நேற்று (4/12/16) மாலை ஆரோவில் நகரத்துக்கு இரண்டு சக்கர வாகனத்தில் சென்றோம். ஆரோவில் நகரத்தின் அழகு மற்றும் குளிர்ந்த காற்று எங்களுக்கு ஒரு இனிய மாலைப் பொழுதினை கொடுத்தது.

பாண்டிச்சேரியில் இருந்து ஆரோவில் நகருக்கு செல்லும் பொழுது நமக்கு ஒருவிதமான புது அனுபவங்களை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்காது. அப்படி என்ன அந்த நகரத்தில் இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கு இதோIMG_20161204_160916

  • அடர்த்தியான மரங்கள்
  • தூய்மையான காற்று
  • அமைதி
  • பறவைகளின் அழகிய ஓசைகள் (குறிப்பாக மாலையில்)
  • இயற்கையான வழி பாதைகள்
  • தியான மண்டபம்
  • நகரத்தின் தாக்கமின்மை

ஆரோவில் நகரத்தில் 45+க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிருந்து பல வெளிநாட்டினர்கள் தங்கள் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். அங்கு, அவர்களுக்கான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. அங்கு வசிப்பவர்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் அன்றாட செயல்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அது ஒரு தனி உலகம் என்று சொன்னால் மிகையாகாது.

IMG_20161204_165119
தியான மண்டபத்தின் உட்புர தோற்றம் மாதிரி

நாங்கள் தியான மண்டபத்துக்கு செல்வதற்கான வழிமுறைகளை அங்கு இருக்கும் தகவல் மையத்தில் கேட்டு அறிந்துகொண்டோம். கண்டிப்பாக அடுத்த முறை எங்கள் பயணம் தியான மண்டபத்தினை பார்ப்பதாக இருக்கும். அதன் பிறகு இன்னும் அதிகமான தகவல்களை உங்களுக்கு கொடுக்க முயற்சி செய்கிறேன்.

புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள், ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம் ஆரோவில்.

நன்றி…

தாஜுதீன்

Advertisements