IMG_20161008_124317

நாள் 8/10/2016

என் அக்கா மகனுக்கு (ராஜிக்) நாளை (9/10/2016) திருமணம். அதற்காக இன்று (8/10/2016) மதிய விருந்து ஏற்பாடு செய்து இருந்தார்கள். அந்த விருந்துக்காக நான் மற்றும் குடும்பத்தினருடன் திருக்கனூருக்கு காலை சுமார் 11 30 மணியளவில் புதுவையில் இருந்து புறப்பட்டு 12 15 மணியளவில் திருக்கனுருக்கு சென்று அடைந்தோம்.

அக்காவின் வீட்டில் அம்மாவையும் என் மனைவியையும் விட்டுவிட்டு. நான் மற்றும் என் இரு மகன்களும்  நண்பர் செல்வமணியின் கடைக்கு புறப்பட்டோம். நண்பர் தனது சொந்த வேலையாக விழப்புரம் சென்று இருக்கிறார் என்று தெரிந்து. அதன் பிறகு, நாங்கள் வயல்வெளிக்கு செல்வோம் என்று முடிவு செய்து புதுகுப்பம் வழியாக காரில் பழைய இளையராஜா பாடல்களை கேட்டுக்கொண்டே சென்றோம்.

அப்படி செல்லும் வழியில் அழகிய வயல்வெளியுடன் பம்பு மோட்டரை பார்த்தேன். உடனே காரை ரோட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு.

நான் நசீம் மற்றும் தாமீமிடம், நாம் அங்கு போய் பார்ப்போமா என்று கேட்டேன். உடனே நசீம் வா டாடி போவோம் என்றான் ஆனால் தமீம் மட்டும் வேணாம் டாடி அம்மா அடிப்பாங்க என்று சொன்னான். நான் அவனிடம் வா போகலாம் அம்மாவிடம் நான் சொல்லகிறேன் என்று சொன்னேன்.

முதலில் நெல் பயிர் இருக்கும் இடத்துக்கு சென்றோம். நசீம் மட்டும் அங்கு இருந்த வாய்க்காலில் விளையாடினான். முதலில் பயமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு வாய்க்காலில் இறங்கியவன். மிக மகிழ்சியாக விளையாடினான். ஆனால் தமீம் மட்டும் வாய்க்காலில் இறங்கவில்லை பயம் காரணமாக.

சிறிது நேரத்துக்கு பிறகு அந்த வழியாக சென்ற ஒருவர் என்னைப் பார்த்து தம்பி பசங்க ஜாலியாக இருக்கிறாங்க போய் அந்த தண்ணி தொட்டியில் குளிங்க என்றார். எனக்கு தெரியும் அவர் ஏன் அப்படி சொன்னார் என்று. ஏன் என்றால் அந்த வாய்க்காலின் ஒரு புறம் நெல் பயிர் மற்றொரு பக்கம் வளர்ந்து அடர்ந்த கரும்பு. வாய்காலில் சில சமயம் பாம்புகள் இருக்கலாம் என்பதால்தான் அவர் அப்படி சொல்லியிருப்பார். இது தான் கிராமம்.  நம்மை கடந்து செல்பவர்களும் நமக்கு நன்மையை செய்துக்கொண்டுதான் செல்வார்கள்.

உடனே, நாங்கள் தண்ணி தொட்டியை நோக்கி நடந்தோம். அங்கு போய் பார்த்தவுடன் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அங்கு இருந்த தண்ணித் தொட்டியின் ஆழம் குழந்தைகள் குளிப்பதுர்க்கு ஏற்றாற் போல் இருந்தது அதனுடன் மிகவும் தெளிந்த தண்ணிர்.

முதலில் நசீம் தொட்டியில் குளிக்க ஆயுத்தமானான், தமீமுக்கு பயம் கலந்த வருத்தம் ஏன் என்றால் நசீம் மட்டும் தொட்டியில் குளிக்க போகிறான் என்று.

நசீம் சிறிது தயக்கத்துடன் தொட்டியில் இறங்கி பயமின்றி தண்ணியில் விளையாட தொடங்கினான். சிறிது நேரத்தில் தமீமுக்கு ஆசை வந்தது. அவனிடம் கேட்டேன். தமீம் நீ பாயுடன் (பாய் என்றால் அண்ணன்) குளிக்கிரியா என்று கேட்ட உடனே ஓகே டாடி என்றான். அப்புறம் என்ன நசீம் மற்றும் தமீம் வயல்வெளியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் ஆனந்தமாக விளையடினார்கள். என் நினைவு சரியாக இருந்தால் இது தான் அவர்களுக்கு முதல் அனுபவம்.

உண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமும் இது. ஏன் என்றால், என் சிறு வயதில் எனக்கு கிடைத்த மகிழ்ச்சிகளை போன்று இவருகளுக்கும் கிடைத்ததை நினைத்து பூரிப்பு.

பிறகு எங்கள் அக்கா வீட்டுக்கு சென்று மதிய விருந்தினை முடித்து விட்டு திருப்தியுடன் புதுவைக்கு வந்து சேர்ந்தோம்.

இன்றைய நாள் மிக மகிழ்ச்சியாக சென்றது பழய நினைவுகளுடன்.

நன்றி…

தாஜுதீன்

Advertisements