அந்த காலத்தில், அரசன் மற்றும் மகா இராணிகள் வாழ்ந்த இரும்பு கோட்டைகளை, நாம் சுற்றுலா தளங்களாக இப்போழுதும் சுற்றிப்பார்க்கின்றோம். இராஜா அவர்கள் வாழ்ந்த அரண்மனை மற்றும் அன்றைய காலத்திலும் யாரும் செல்லமுடியாத இராணியின் அரண்மனைகளிலும், நாம் எந்த தடைகளும் இல்லாமல் சென்று பார்வையிடுகிறோம்.

நாம் சுற்றிப்பார்பது மட்டுமல்லாமல், அங்கு உள்ள சில இடங்களில், நம் பெயர் மற்றும் நமக்கு பிடித்த பெயர்களையும் செதுக்கிவிட்டு வருகிறோம். அது மட்டுமா, ஒரு சில இரும்பு கோட்டைகளை, கைதிகளை அடைத்துவைக்கும் இடமாகவும் மாற்றிவைத்துள்ளோம்.

இப்படிபட்ட சக்தி வாய்ந்த இரும்பு கோட்டைகள், பாழடைந்து போகும் என்று அப்போழுது வாழ்ந்த அரண்மனை வாசிகளும் மற்றும் அன்றைய மக்கள்களும் ஒரு போழுதும் நினைத்து இருக்கமாட்டார்கள்.

அவைகளை போன்றுதான், இப்போழுதுள்ள அ.தி.மு.காவின் (இரும்பு கோட்டையின்) நிலை.

பொருத்திருந்து பார்ப்போம், யார் யாரல்லாம், அவர்களின் பெயர்களை அ.தி.மு.க என்னும் இரும்பு கோட்டையில் கிறுக்கபோகிறார்கள் என்று.

தாஜூதீன்

Advertisements