இன்று (12 மார்ச் 2017), விழுப்புரத்தில் நடைப்பெற்ற உறவினர் திருமணத்துக்கு நான், தமீம் மற்றும் அம்மா ஆகியோர் சென்றோம்.

இன்று நடைபெற்ற திருமணம், இஸ்லாம் முறைபடி நடைபெற்றது என்றால் மிகையாகாது. (அவர்கள், தவுஹித் ஜமாத் திருமணம் என்று கூறுவார்கள்). அவ்வளவு எளிமையாகவும், எந்த வித ஆர்பாட்டமும் இல்லாமால் நடைபெற்றது. ஆடம்பர பொருள் செலவுகள் இன்றி நடைபெற்ற திருமணம்.  

பள்ளிவாசலில் நடைபெற்ற திருமணத்தில், திருமணம் உரை மிக அருமையாக இருந்தது. உரையில் முக்கிய செய்தி.

  1. தனி மனிதனின் ஒழுக்கம்
  2. எளிமையான வாழ்க்கை முறை
  3. திருமணத்தின் வழிமுறை

உரைக்கு பிறகு திருமண ஒப்பந்ததை படித்து காட்டினார்கள், அதில் மிக முக்கியமாக இந்த திருமணம் பெண் வீட்டாரிடம் இருந்து எந்த வித வரதட்சனைகள் வாங்கவில்லை என்ற உறுதிமொழியையும் கொடுத்தார்கள்.

திருமணம் முடிந்து பள்ளிவாசல் அருகில் மதிய விருந்து. விருந்து மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது.

இந்த திருமணத்தில் கீழே உள்ளவைகள் இல்லை

  1. திருமணம் மண்டபம் இல்லை
  2. மாப்பிள்ளைக்கு ஆடம்பர ஆடை இல்லை
  3. பூ மாலைகள் இல்லை
  4. பரிசு பொருட்கள் வாங்கவில்லை

இப்படியான திருமணங்கள் இப்போழுது அதிகமாக நடைபெறுவது, உண்மையில் மகிழ்சியாக இருக்கிறது. நாமும், நம் குடும்பத்தில் நடைபெறுகின்ற திருமணத்தை வரதட்சனைகள் இன்றி, பரிசு பொருட்கள் வாங்கமல், மிகவும் எளிமையாக பள்ளிவாசலில் அமைத்துகொள்வோம்.

நன்றி.

தாஜுதீன்

Advertisements