மே 1 ஆம் தேதி முதல் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்று புதுவை அரசு உத்தரவைபோட்டுள்ளது. அதன்படி புதுவையில் 80 சதவிகிதம் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்கிறார்கள்.

தலைக்கவசம் அணிந்து செல்வது சிரம்மம் இருந்தாலும், அது நம்முடைய உயிரைக்காக்கும் என்பதால் சிரமம் பார்க்காமல் தலைக்கவசத்தை அணிந்து செல்வது நன்று. இதனால் நமக்கும், நம் குடும்பாத்தார்களுக்கும் பயணை தரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

சாலை விபத்தில், தலையில் அடிப்பட்டு தன் இன்உயிரை இழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தெரியும். தலைக்கவசம் எவ்வளவு முக்கியம் என்பது.

ஆகையால், தலைக்கவசம் தன் உயிர்கவசம் மட்டும் அல்ல தன் குடும்பத்தையும் காக்கும் கவசம் ஆகும்.

தலைக்கவசம் அணிவோம் தன் குடும்பத்தையும் காப்போம்.

நன்றி…

தாஜுதீன்

 

 

 

Advertisements