அரசுப்பள்ளி
10ஆம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய மூன்று ஆண்டுகள் பொது தேர்வாக மாணவர்கள் எழுதவேண்டும்.
இந்த அறிவிப்புக்கு முக்கிய காரணங்கள்.
பல தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 பாடத்தை நடத்தாமல் இரண்டு ஆண்டுகளும் பிளஸ் 2 பாடத்தை நடத்துகிறார்கள். இதனை தவிர்க்கவேண்டும்
நீட் ேதர்வில் வெற்றிபெறவேண்டும்.
மற்ற மாநிலத்தைவிட, நம் மாணவர்களின் கல்வி தகுதி மிகவும் குறைவாக இருக்கிறது
ஆகிய காரணத்தினால் மூன்று ஆண்டுகளும் பொது ேதர்வாக எழுதினால் கல்வி அறிவு அதிகமாகி, நீட் தேர்வு மற்றும் இந்திய அளவில் நடக்கும் அனைத்து தேர்விலும் நம் தமிழ் நாட்டு மாணவர்களே அதிகமாக தேர்வாக வாய்ப்பு இருக்கிறது என்று அரசு கருதுகிறது.
அரசின் இந்த முதல் முயற்சிக்கு நம் பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறோம்.
கல்வி தகுதியை அதிகரிக்க இந்த ஒரு மாற்றம் போதுமானதா என்றால் கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
இந்த மாற்றத்தினால், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. உண்மையில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தான் அதிக நன்மை. ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நிலைமை இப்போழுது இருப்பதைவிட இன்னும் மோசமாக ேபாகும் என்றால் அது மிகையாகாது.
பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறையினால், குறைந்தது பிளஸ் 2 பாடத்தை முழுமையாக மாணவர்களுக்கு நடத்தி அவர்களை ேதர்ச்சி பெற வைக்கிறார்கள். இனி அதுவும் நடக்காது. ஆசிரியர்கள் இரண்டு வகுப்பில் உள்ள மாணவர்களுக்கும் முழுமையாக பாடத்தை முடிக்கவேண்டும். இது அவர்களுக்கு பனிசுமையை அதிகரிக்கும் என்பது உண்மை.
அரசு ஒரு முடிவை எடுக்கிறது என்றால் அது அனைத்துவிதமான மாணவர்களுக்கும் பயன்தரும் வகையில் இருக்கவேண்டும். அது மட்டும் அல்லாமல் எதை முதலில் செய்யவேண்டும் என்பதை ெதரிந்துவைத்து இருக்கவேண்டும்.
கல்வியில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இல்லை, ஆனால் கல்வியில் குறைந்த கால திட்டம் எப்பொழுதும் பயன்தராது. நீண்ட கால திட்டம் தான் மாணவர்களுக்கு பயன்தரும்.
முதலில்
- நம்முடைய பாடத்திட்டத்தை முதல் வகுப்பில் இருந்து மாற்றவேண்டும். அது குறைந்தது நம் நாட்டின் தரத்தில் இருந்தால் நன்று.
- அதிகமான அரசுப்பள்ளிகளை திறக்கவேண்டும்
- தகுதியான ஆசிரியர்களை நியமிக்கவேண்டும்
- ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்
- பள்ளிக்கூடங்களின் தரத்தை உயர்த்தவேண்டும், குறிப்பாக முதல் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களின் பள்ளிக்கூடங்கள்.
மேலே கூறிப்பிட்டவைகளை மிகவும் கடினமாக ஆராய்ந்தும், பல ேபர் கூடி விவாதித்தும் எழுதியவை அல்ல. இவைகள் நம் தமிழ்நாட்டில் சில தனியார் பள்ளிகளில் நடைமுறையில் உள்ளவைகளை தான் சொல்கிறேன்.
இவைகளை அரசு முதலில் கவனம் செலுத்தி மாற்றங்களை கொண்டுவந்தால், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பயன் அடைவார்கள். இந்த மாற்றங்களை செய்து பாருங்கள், மூன்று ஆண்டுகள் மட்டும் அல்ல, பன்னிரண்டு ஆண்டும் பொதுத் தேர்வு என்றாலும். எந்த வித தயக்கமும், ஐயமும் இல்லாமல் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வார்கள்.
கண்டிப்பாக, இந்த மாற்றங்களுக்கு பல கோடிகள் செலவு செய்யவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நமது அரசிடம் பணம் இல்லை என்பதும் உண்மை. கல்விக்காக செலவு செய்வதினால் எந்த வருவாயும் திரும்பி வராது என்பதும் உண்மை.
இதற்கு ஒரு ஆலோசனை உள்ளது.
அடுத்த ெபாது ேதர்தலுக்காக (எங்களுக்கு) கொடுக்க இருப்பதை வைத்து இதனை சாத்தியமாக்குங்கள். அதற்கு பிறகு நீங்கள் தான் நிரந்தர ஆட்சியாளர்களாக இருப்பீர்கள், நீங்கள் மட்டும் அல்ல உங்களின் அடுத்த இரண்டு தலைமுறைகளும் ஆட்சியில் இருப்பீர்கள்.
தமிழர்கள், நன்றி கடனை கண்களை மூடிக்கொண்டு வழங்குவார்கள்.
இது, அரசு பள்ளியில் படித்து …. …. …., தன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்கவைக்கும் பெற்றோர்களின் வேண்டுகோள்
நன்றி…
Excellent article, sir! தகுதியுள்ள ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற point super….
LikeLiked by 1 person
அடுத்த ெபாது ேதர்தலுக்காக (எங்களுக்கு) கொடுக்க இருப்பதை வைத்து இதனை சாத்தியமாக்குங்கள். Awesome words sir…
LikeLike