இரண்டு நாள் பயணமாக ஒகேனக்கல் செல்லலாம் என்று முடிவுசெய்து, நண்பர்களுடன் 30 ஜுன் 2017ம் நாள் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் புதுச்சேரியில் இருந்து இரண்டு கார்களில்  புறப்பட்டடோம். என்னுடைய காரில் நான், மகுஷ் மற்றும் தவமணிகன்டனும், ஜெயேஷ் காரில் ஜெயேஷ், தாமஸ்ராஜ், முகமது யஹயா மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் இனிதே பயணத்தைத் தொடங்கினோம்.

IMG_20170701_004713

எங்கள் பயணத்தை புதுச்சேரியில் இருந்து உளுந்துர்பேட்டை, சேலம் மற்றும் தர்மபுரி வழியாக அமைத்துக்கொண்டோம். இரவு பயணம் மிகவும் ரம்மியமாக இருந்தது.  இரவு பயணம் என்பதால் இடை இடையே சிறிது ஓய்வு எடுத்துகொண்டு பயணித்தோம். 

சனிக்கிழமை, அதிகாலை சுமார் 6 மணியளவில் ஒகேனக்கல் சென்று அடைந்தோம். ஒகேனக்கலில் அருவியில் தண்ணீர் மிகவும் குறைவான அளவே இருந்தது, இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தண்ணீர் குறைவாக இருந்ததால் நாங்கள் அருவியில் குளிக்கவில்லை. அருவி மற்றும் தொங்கும் இரும்புபாலம் ஆகிய இடங்களுக்கு சென்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம்.

பிறகு என்ன செய்யலாம் என்று யோசனையில் இருக்கையில், மகுஷ் சொன்ன யோசனையை ஏற்று, ஒகேனக்கலின் உள்பகுதிக்கு செல்ல முடிவுசெய்தோம். மகுஷ்கு ஏற்கனவே பரிச்சையமான மாரியப்பன் (94863 58437) என்ற வழிகாட்டியை எங்களுடன் இனைத்துக்கொண்டோம். ஒகேனக்கல் உள்பகுதி என்பதால் வழிகாட்டி இல்லாமல் செல்வது மிகவும் ஆபத்தானது. அவர்களுக்கு தான், நாம் எங்கு செல்லவேண்டும் என்பதைவிட, நாம் எங்கு செல்லகூடாது என்று தெரியும். 

ஒகேனக்கலில் கார் பார்க்கிங் இடத்தில் எங்கள் கார்களை விட்டுவிட்டு, அதன் அருகிலுள்ள மீன் மார்கட்டில், காலை மற்றும் மதியத்திற்கு தேவையான மீன்களை வாங்கிக்கொண்டோம். (4 கிலோ மீனை 700 ரூபாயிக்கு) மற்றும் காலை உணவாக இட்லியையும் அங்கேயே வாங்கிக்கொண்டு எங்கள் வழிகாட்டியுடன் புறப்பட்டோம். 

மிகவும் அழகிய ஓடைக்கு எங்களை அழைத்துக்கொண்டு சென்றார். அங்கு, தண்ணீர் மிதமாக ஓடிக்கொண்டே இருந்தது, பார்ப்பதற்கு அழகாகவும் மற்றும் ஆபத்தானதாகவும் இருந்ததது. அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்தும் இருக்கும் என்று சொல்வார்கள்.

DSC_0430

தண்ணீர் ஓடையை பார்த்தபின்புதான் எங்களுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. இந்த நேரத்தில் எங்கள் வழிகாட்டிக்கு மிக்க நன்றியை ெதரிவித்துக்கொள்கிறோம். எங்களை மிகவும் கவனமாகவும், பாதுக்காப்பாகவும் இந்த இடத்துக்கு கொண்டுவந்தார்.

காலை சுமார் 8 மணியளவில், தண்ணீர் ஓடையின் இனிமையான சத்தம் எங்களுக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்தது. நாங்கள் அனைவரும் பயணத்தின் களைப்பின்றி உற்சாகமாக தண்ணீரில் விளையாடதொடங்கினோம். சிறிது நேரத்தில் நாங்கள் அனைவரு பயம் இன்றி தண்ணீரில் மகிழ்ச்சியாக குளித்தோம்.

சிறிது நேரத்தில், முகமது எகையாவிடம் இருந்து அபாயகுரல், என்ன என்று பார்த்தால், எங்கள் உடைமைகளை வைத்த இடத்தின் அருகில் மிகவும் நீளமான இரண்டு பாம்புகள் விளையாடிக்கொண்டு இருந்தது.  எங்களின் சத்ததின் காரணமாக அவைகள் மரத்தின் அடியில் சென்றுவிட்டது. அதற்கு பிறகு நாங்கள் பாம்புகளை பார்க்கவில்லை. சிறிது நேரத்துக்கு பாம்பின் பயம் அனைவருக்கும் இருந்தது. பிறகு பயம் இன்றி தண்ணீரில் குளித்து மகிழ்ந்தோம்.

இதற்கிடையில் எங்கள் அனைவருக்கும் சுட சுட வறுத்த மீனை கொண்டுவந்து கொடுத்தார் எங்கள் வழிகாட்டி. வறுத்த மீனின் ருசி மிகவும் அருமை. நாங்கள் அனைவரும் மீன் வருவலை தண்ணீரில் உட்காந்துக்கொண்டே சாப்பிட்டோம். மீன் வறுவல் மற்றும் அங்கு இருந்த சூழ்நிலை மிகவும் நன்றாக இருந்தது. இப்படியான அனுபவம் எங்களுக்கு மிகவும் புதியதாக இருந்தது.

காலை உணவாக, மீன் வறுவலுடன் நாங்கள் வாங்கி கொண்டுவந்த இட்லியை சாப்பிட்டோம். பிறகு தண்ணீரில் மிதந்துகொண்டு இருந்தோம். காலம் நாங்கள் நினைத்ததைவிட மிகவும் வேகமாக கழிந்தது.

Screen Shot 2017-07-19 at 11.36.13 PM

எங்கள் வழிகாட்டி, சமையல் பொறுப்பில் இருந்து மசாஜ் செய்பவராக மாறினார். நாங்கள் அனைவரும் அவரிடம் உதை வாங்க தயாராகினோம், மன்னிக்கவும் மசாஜ் செய்துகொள்ள தயாராகினோம். அனைவருக்கும் சிறப்பாக மசாஜ் செய்தார், மகிழ்ச்சி சிறிது வலியுடன். 

மசாஜ் முடிந்து குளித்தவுடன் எங்கள் அனைவருக்கும் பசியெடுக்க தொடங்கியது. எங்கள் வழிகாட்டியின் வீட்டில் சமைத்த மதிய உணவை சுவாமிநாதனும் எங்கள் வழிகாட்டியும் எடுத்துவந்தார்கள். மதிய உணவாக அரிசி சாப்பாடு, மீன் குழம்பு மற்றும் நாங்கள் இருக்கும் இடத்தில் வறுத்த சுடசுட மீன். ஓடும் தண்ணீருடன் மதிய உணவு. அவ்வளவு அருமை.

IMG_3632

அனைவரும் சொல்வதை ேபான்று, மனம் இல்லாமல் அந்த இடத்தில் இருந்தது புறப்பட்டடோம். எங்கள் வழிகாட்டிக்கு ரூபாய் 4000 கொடுத்தோம், அவரும் அதனை மகிழ்சியுடம் பெற்றுகொண்டார். அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை சொல்லிவிட்டு, அடுத்து என்ன என்று ஆலோசித்தோம், ஒக்கேனக்களில் இரவு தங்குவதா? அல்லது ஏற்காடு சென்று தங்குவதா?. அனைவரின் முடிவின்படி ஏற்காடு புறப்பட்டோம். 

மாலை சுமார் 3 மணியலவில் ஒக்கேனக்களில் இருந்து ஏற்காடு புறப்பட்டோம். இரவு 7 மணியலவில் ஏற்காடு வந்தடைந்தோம், நாங்கள் வந்த ஏற்காடு பாதை மிகவும் கடினமாக இருந்தது. கீழேயுள்ள வழிபாதையில் தான் ஏற்காடுக்கு வந்தோம்.

இது பல மலைகிராமங்கள் வழியாகவும், வழி பாதை மிகவும் மோசமாக, திகில் நிறைந்த பாதையாகவும் இருந்தது. எப்படி இருந்தாலும் எங்களுக்கு இது ஒரு விதமான திகில் அனுபவத்தை கொடுத்தது என்றால் அது மிகையாகாது. பாதைமட்டும் நன்றாக இருந்தால் இந்த வழியாக ஏற்காடு செல்வதற்க்கு மிகவும் அருமையாக இருந்திருக்கும்.

IMG_20170702_110922

ஏற்காட்டில், நாங்கள் தங்கிய விடுதி மிகவும் நன்றாக இருந்தது, அது எங்களுக்கு கூடுதல் மகிழ்சியை கொடுத்தது. இரவு உணவாக இட்லி, பரோட்டா, சிக்கன் தந்தூரி ஆகியவையை ஆர்டர் செய்து சாப்பிட்டோம். சாப்பிட்டவுடன் ஒரு விளையாட்டும் விளையாடினோம், அது மிகவும் சுவாரசியமாக இருந்தது. இப்படியாக இரவு 11 மணியளவில் அனைவரும் படுக்கைக்கு சென்றோம். குளிர்ந்த சூழ்நிலையில் இரவு உறக்கம் சுகமாக இருந்தது.

IMG_20170702_130959-PANO

ஞாயிற்றுக்கிழமை காலை மிகவும் தாமதமாக விடுதியில் இருந்து புறப்பட்டோம், விடுதி அருகில் உள்ள கடைகளில் வீட்டுக்கு மற்றும் குழந்தைகளுக்கான பொருட்களை வாங்கிக்கொண்டு, ஏற்காட்டில் உள்ள லேடிஸ் சீட், பகோடா பாயிண்ட் ேபான்ற சில இடங்களை சுற்றி பார்த்துவிட்டு புதுச்சேரிக்கு புறப்பட்டோம். ஞயிற்றுக்கிழமை இரவு 8 மணியலவில் புதுச்சேரிக்கு வந்தடைந்தோம். வரும் வழியில் மிதமான மழையுடன் எங்கள் பயணம் இனிதே முடிந்தது.

img_20170702_125146.jpg

ஒகேனக்கல் போகிறோம் என்பதை தவிர நாங்கள் எந்த வித முன் ஏற்பாடும் செய்யாமல் பயணித்ததுதான் இந்த பயணத்தின் சிறப்பு மற்றும் மகிழ்ச்சி. நன்றி.

தாஜூதீன்

Advertisements