17-08-2017

டாக்டர். திரு. கிருஷ்ணசாமி அவர்கள் பங்குப்பெற்ற இன்றைய (காலத்தின் குறல் 16-08-2017) விவாதத்தில், நீட் தேர்வின் முக்கியத்தை விளக்கினார். அது மட்டும் அல்லாமல், +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, நீட் தேர்வில் தகுதி பெறவில்லை என்றால், +2 தேர்வில் எடுத்த மதிப்பெண் முறையற்றது, அவர்கள் மருத்துவ கல்விக்கு தகுதியற்றவர்கள் என்று மிகவும் ஆணிதனமாக எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல் பேசினார்.

தமிழ் நாட்டில், கடந்த காலங்களில் +2 தேர்வின் மதிப்பெண் மற்றும் இடஒதிக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் மருத்துவ கல்விக்கு மாணவர்களை தேர்வு செய்துவந்தார்கள் (டாக்டர். திரு. கிருஷ்ணசாமி அவர்கள் உட்பட). 

நீட் தேர்வு, மத்திய பாடத்திட்டதின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படுகிறது என்பது அனைவருக்கும் ெதரிந்த ஒன்று. அந்த தேர்வை, மாநில பாடத்திட்டதில் படித்த மாணவர்களுக்கு நடத்தினால் அவர்கள் எப்படி நீட் தேர்வில் தகுதிபெறுவார்கள். இது டாக்டர் திரு. கிருஷ்ணசாமி அவர்களுக்கு நன்றாக தெரியும், ஆனால் அவைகளை அனைத்தும் அறியாதவராக இன்று பேசினார். அவரிடம் இருந்து இப்படியான கருத்தை எதிர்பார்க்கவில்லை.

நீட் தேர்வை எதிர்கொள்வதற்கு மாணவர்களுக்கு எந்தவித தயக்கமும் இருக்காது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நீட் தேர்வின் கேள்விக்கு தகுந்தார் போன்று, மாணவர்களின் பாடத்திட்டதை மாற்றிவிட்டு, அதன் பின் நீட் தேர்வை நடைமுறைபடுத்தவேண்டும். அது தான் நீதி.

என்ன, தனியார் பள்ளியில், மாநில பாடத்திட்டதில் படிக்கவைக்க வீட்டுக்கு வெளியே உள்ள ஆடு, மாடு மற்றும் நிலங்களை விற்றார்கள். இனி தனியார் பள்ளியில், மத்திய பாடத்திட்டதில் படிக்கவைக்க வீட்டின் உள்ளே உள்ள தாலி மற்றும் தேவைப்பட்டால் வீட்டையே விற்கவேண்டும், அவ்வளுவுதான் வித்தியாசம்.

நீட்டை ேபான்று அடுத்த அதிர்ச்சியை ஆவளுடன் காத்துக்கொண்டு இருக்கும் மாணவனின் பெற்றோர்…

தாஜூதீன்

Advertisements