புத்தூர் ஜெயராமன் உணவகம்
01-April-2018
உணவு, உடை மற்றும் உறங்கும் இடம் என்பது மனித இனத்துக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று என்றால் அது மிகையாகாது.
அதிலும், சுவையான அசைவ உணவு என்பது முதன்மையானது என்று சொல்பவர்களுக்கு. புத்தூர் ஜெயராமன் உணவகத்தின், உணவு மிகவும் பிடிக்கும்.
புதுவையில் இருந்து சுமார் 77 கிலோமீட்டர் தொலைவில், கடலூர் மற்றும் சிதம்பரம் வழியாக புத்தூர் சென்றடையலாம். புத்தூர் என்ற ஊர் மிகவும் சிறிய கிராமம். ஆனால் உணவு பிரியர்களுக்கு அனைவருக்கும் அந்தக் கிராமம் மிகவும் பரிச்சயமான இடம். ஏன் என்றால், அங்கு தான் புத்தூர் ஜெயராமன் உணவகம் இருக்கிறது.
அந்தக் கிராமத்தை போன்று அந்த உணவகம் மிகவும் சிறிய அளவில் இருக்கும். சுமார் 25-30 பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். அந்த உணவகம், தென்னை கீற்றினால் ஆன கூரை. இருந்தும் உணவு விரும்பிகள் அனைவரும் அங்கு வருவதற்கான காரணம், சுவை, அருமையான சுவை.
புத்தூர் ஜெயராமன் உணவகத்தில் மூன்று உணவுகள் மிகவும் அருமையாக இருக்கும். ஒன்று இறால் வறுவல், மற்றொன்று வஞ்சரம் மீன் வறுவல் கடைசியாக தயிர்.
மதியம் சாப்பாடாக, அரிசி சாப்பாடு, மீன் குழம்பு, இறால் வறுவல், வஞ்சரம் மீன் வறுவல் கடைசியாக தயிர்.
இறால் வறுவலைப் பற்றி சொல்லவேண்டும் என்றால், சுவைக்கு அர்த்தம் அந்த இறால் வறுவலைச் சாப்பிட்டால் புரிந்துவிடும். அந்த அளவுக்கு நன்றாக இருக்கும். அதுவும் இறால் வறுவலை அரிசி சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டால், ஆக அந்தச் சுவையினை வார்த்தையினால் சொல்லமுடியாது. அந்த அளவுக்கு அருமையாக இருக்கும்.
அவர்கள் இறால் வறுவலைச் செய்யும் முறையே அழகானது. உணவகத்தின் பின்புறத்தில் சில பெண்கள் இறாலைச் சுத்தம் செய்துகொண்டு இருக்கிறார்கள். உணவகத்தின் முன்புறத்தில், இரண்டு பெரிய விறகு அடுப்பில் இறால் வறுவலைத் தயார்செய்கிறார்கள். ஒரு அடுப்பில், சுத்தம் செய்த இறாவுடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து வறுக்கிறார்கள் அதன் பச்சைதன்மை போகும் வரை. அடுத்த அடுப்பில் வெங்காயம், மிளகு தூள், கொத்தமல்லி இலை அத்துடன் சில பொருட்களையும் சேர்த்து வறுக்கிறார்கள். பிறகு, வறுத்த இறாவை எடுத்து வெங்காயத்துடன் சேர்த்து கொஞ்சம் நேரம் வறுக்கிறார்கள். அதன் பிறகு சுவையா இறால் வறுவல் தயார்.
இதனைப்போன்று, வஞ்சரம் மீன் வறுவல், மீன் சாப்பிடுவார்களுக்கு வஞ்சரம் மீன் மிகவும் பிடிக்கும், அதுவும் அங்குச் செய்யும் வஞ்சரம் மீன் பொன் நிறத்தில் மிகவும் அருமையாக இருக்கும்.
எனக்குத் தயிர் என்றால், வெண்மை நிறத்தில் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன், அங்கு போனபிறகு தான் தெரிந்தது, தயிரின் நிறம் வெண்மை இல்லை என்று.
தயிர் சாப்பாட்டுடன் இறால் வறுவல் சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும், சாப்பிட்டவர்களுக்குத் தான் தெரியும், நான் என்ன சொல்கிறேன் என்று. அதனை வார்த்தைகளினால் எழுத முடியாது.
அந்த வழியாகப் பயணம் செய்தால், ஒரு முறை மதியம் உணவை அங்குச் சாப்பிடுங்கள், பிறகு தெரியும் சுவையின் அருமை.
நன்றி…
தாஜூதீன்
Super👍🏻👍🏻👍🏻👍🏻
LikeLiked by 1 person
Good marketing for this hotel…
LikeLiked by 1 person
எளிமையான உரைநடை, அருமையான தெகுப்பு.
மொத்தத்தில் சிறப்பு.
LikeLiked by 1 person
Great ✋👍
LikeLiked by 1 person
Rasanai…
LikeLiked by 1 person
உணவு தயாரிப்பது ஒரு கலையென்றால் இரசித்து உண்பதும் தன் ருசித்த உணவினை (குறிப்பாக அசைவ வகைகளைப் பற்றி) மற்றவர்களுக்கு பரிந்துரைப்பதும் பிரிதொரு கலை. இங்கு புத்தூர் ஜெயராமன் உணவகம் (சிறிய மெஸ்தான்) அசைவ உணவு பற்றி விளக்கமாகப் பதிவு செய்துள்ளது குறித்து உங்களுக்கு எனது நன்றியும் பாராட்டும்.
LikeLiked by 1 person
Great…
LikeLike