காவேரி போராட்டம் ஒன்றும் நம் தமிழ்நாட்டுக்கு புதியது இல்லை. கடந்த பல வருடங்களாக போராடிக்கொண்டே தான் இருக்கிறோம். இப்படியான போராட்டங்களினால் நமக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பது தான் உண்மை. ஆனாலும் நாம் போராடிக்கொண்டே இருக்கிறோம். ஏன் என்றால் இன்று இல்லையன்றாலும், என்றாவது ஒரு நாள் நமக்கான நீதி கிடைக்காதா என்ற நம்பிக்கையில்.

கடந்த வருடங்களில் நாம் காவேரிக்காக எவ்வளவு போராடினாலும் நமக்கான நீதியை கொடுத்தது இயற்கை மட்டுமே. எந்த வருடம் இயற்கையாக அதிக மழை இருந்ததோ அந்த வருடம் காவேரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதைக் கண்டோம். அப்பொழுது நமக்கு எவ்வளவு டிஎம்சி தண்ணீர் வந்தது என்தற்கான அளவு நம்மிடம் இல்லை.

காவேரி விசயத்தில், இயற்கை மட்டுமே நமக்கான நீதியை கொடுக்கமுடியும், இல்லையன்றால், இவ்வளவு வருடங்களாகத் தண்ணீருக்காக போராடிய நம்மை, காவேரி மேலாண்மை குழுவை அமைக்க வேண்டும் என்று போராடவைப்பார்களா. இது தான் அரசியல். இதனை நாம் கடந்துதான் போகவேண்டும்.  இதுவும் கடந்து போகும்.

எதிர் வரும் போராட்டங்களை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் தமிழன்.

தாஜூதீன்

Advertisements