சென்னை சூப்பர் கிங்ஸ் – 3வது வெற்றி
27-May-2018
இன்று, நடைபெற்ற CSK vs SRH இறுதி IPL ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்று 3வது முறையாக கோப்பையை வெல்கிறது.
பரபரப்பான ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த SRH மிகவும் நேர்த்தியான விளையாட்டினால் 179 ரன் எடுத்தது. அதுவும் குறிப்பாக சன் ரைஸ் அணியின் கேப்டன் Kane Williamson (47) மற்றும் Yusuf Pathan (45*) ஆகிய இருவரின் அருமையான ஆட்டத்தினால் அந்த அணி 178 ரன் எடுக்கமுடிந்தது.
பிறகு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் எளிமையாக 181 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அதுவும் Shane Watson (117*) எடுத்து அணியின் வெற்றியை மிகவும் எளிதாக்கினார் என்றால் மிகையாகாது.
இந்த வெற்றி உண்மையில் தோனி அவர்களுக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம். அந்த IPL தொடர் முழுவதும் தோனியின் உழைப்பு மிகவும் அளாதியானது. இந்த வெற்றியின் மூலம் வயது ஒன்றும் விளையாட்டுக்குத் தடையில்லை என்பதையும் நிரூபித்துள்ளார்கள்.
இந்த வெற்றி, தோனியின் தலைமை பொறுப்புக்கு இன்னோரு மணி மகுடம்.
தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் இந்த வெற்றி தொடர வாழ்த்துக்கள்.
தாஜூதீன்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தோனிக்கு இந்த கோப்பை சமர்பணம் ……
ஆப்ரு…..
LikeLiked by 1 person
Good example for leadership, Dhoni…
LikeLiked by 1 person