கலைஞர் மு. கருணாநிதி – 95வது பிறந்த நாள்
03-06-2018
இன்று, தனது 95வது பிறந்த நாள் கொண்டாடும் மாண்புமிகு தமிழக முன்னால் முதல்வர் மற்றும் திமுகவின் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
கடந்த 70+ ஆண்டுகளில் தமிழகம் மற்றும் இந்திய வரலாற்றின் தவிர்க்க முடியாத மிக முக்கிய அரசியல் தலைவர் கலைஞர் அவர்கள். அவருடைய கவிதை நடை பேச்சு, தலைமை பொறுப்பு, சமயோசித புத்தி மற்றும் சுய மரியாதை சிந்தனை இவற்றுடன் உழைப்பு ஆகியவை திமுகவின் நிரந்தர தலைவராகவும் மற்றும் 5 முறை தமிழக முதலமைச்சராகவும் ஆக்கியது.
அவருக்கு எதிர் பக்கத்தில் இருப்பவர்களும் அவரின் உழைப்பு மற்றும் தமிழ் / அரசியல் அறிவுத் திறனுக்கு ரசிகர்களாக இருப்பார்கள்.
அவர் தன் வாழ்நாளில் நிறைய வெற்றிகளையும் மற்றும் அதற்கு நிகரான தோல்விகளையும் எதிர்கொண்டு இருக்கிறார். இன்றும், அவருடைய தாக்கம் இன்றி அரசியல்வாதியாகவும், கவிஞர்களாகவும் மற்றும் மேடை பேச்சாளர்களாகவும் இருப்பது மிகவும் அரியது.
எனக்கு மிகவும் பிடித்த கலைஞர் அவர்களின் கவிதை நடை பேச்சு.
வாழ்க பல்லாண்டு
தாஜூதீன்
Legend of Tamil Nadu….
LikeLiked by 1 person