11-06-2018

நோன்பு பெருநாள் வருவதை ஒட்டி, குழந்தைகளுக்கு புது ஆடைகள் வாங்க Trendsக்கு குடும்பத்துடன் சென்றேன். நசீமுதீன் மற்றும் தமீமுக்கு புது ஆடைகள் வாங்கிக்கொண்டு, அதற்கான பணம் கொடுக்கும் வரிசையில் நிற்கும் போழுது ஒரு நிகழ்வு.

ஒரு தம்பதி, கணவருக்கு சுமார் 60 வயதுக்கு மேல் இருக்கும் அவருடைய மனைவிக்கு 50 வயது இருக்கலாம். அவர்கள் பணம் கொடுக்கும் இடத்தில் சிறு வாக்குவாதம் நடந்துக்கொண்டு இருந்தது. என்னவென்றால்.

பில்போடுபவர் அவர்களிடம், உங்களின் துணிகளை எடுத்துக்கொண்டு போகுவதற்குப் பை இருக்கிறதா என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் இல்லை என்று சொல்ல,

நாங்கள் carrybag தருகிறோம் அதற்குத் தனியாக பணம் செலுத்தவேண்டும் என்று சொல்ல.

அதற்கு அவர்கள், என்ன ஒரு அநியாயம், எனக்குத் தெரிந்து எந்த ஒரு ஜவுளிக்கடையிலும் பையிக்கு தனியாக பணம் கேட்கமாட்டார்கள். இங்கு மட்டும் ஏன் கேட்கிறீர்கள் என்று கோபமாகக் கேட்டுவிட்டு. கூப்பிடுங்கள் உங்கள் மேனஜரை என்றார்கள்.

உடனே மேனஜர் வந்து அந்தப் பெரியவரிடம், உங்கள் பிரச்சனை என்ன என்றார், அதற்கு அந்தப் பெரியவர், ஜவுளிக்கடையில் துணியை எடுத்துக்கொண்டு செல்வதற்கான பையிக்கு எதற்கு பணம் கேட்கிறீர்கள் என்றார்.

அதற்கு மேனஜர், இது ஜவுளிக்கடையில்லை, retail shop என்றும், இங்கு இப்படிதான் பல வருடங்களாக carrybagக்கு பணம் வாங்குகிறோம் என்றார்.

ஜவுளிக்கடையில்லை என்றவுடன் அந்த பெரியவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. கடைசியாகச் சரி கொடுங்கள் என்றார். அவர்களும் துணிகளை கொடுத்து அனுப்பினார்கள்.

ஆனால், அந்தப் பெரியவர் கேட்ட கேள்வி உண்மையில் சரியான கேள்வியே. 

எனக்கு ஒரு சந்தேகம். Reliance Trends ஒரு ஜவுளிக்கடைதானே?

இனி இந்த மாதிரியான ஜவுளிக்கடைக்கு தவறு retail shopக்கு செல்லும் போழுது வீட்டில் இருந்து ஒரு பையை எடுத்துக்கொண்டு போகவேண்டும் என்று தோன்றுகின்றது. ஆனால் இப்போழுதுள்ள நடைமுறைக்குச் இது சாத்தியமாக இருக்குமா என்றால் அது ஒரு மிகப்பெரிய கேள்வி தான். இருந்தும் முயற்சி செய்து பார்ப்போம்.

நன்றி…

தாஜூதீன்

Advertisements