திமுக தலைவர் கருணாநிதி நலம், வதந்திகளை நம்ப வேண்டாம் – ஆ ராசா
காவேரி மருத்துவமனை அறிக்கை
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் உடல்நிலையில், தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் குழுவின் தொடர் சிகிச்சையால் உடல்நிலை சீரானது. அவர் தொடர்ந்து மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார். மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அறிக்கையை தொடர்ந்து, திரு ஆ. ராசா அவர்கள் காவேரி மருத்துவமனையில் கூடி இருந்த செய்தியர்களிடம் “திமுக தலைவர் கருணாநிதியின் உடலில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை காரணமாக பின்னடைவு சீர் செய்யப்பட்டது. அவர் நல்ல நிலையில் இருக்கிறார். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று பேட்டியளித்தார்.