விதைக்கப்பட்டுள்ளது, இனி விரைவில் வளரும்! – Blue Sattai மாறனின் மறுபக்கம்
மாறன் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் படங்களை விமர்சனம் செய்வது. அதுவும் படம் நன்றாக இல்லை என்றால் அவ்வளவுதான், அந்தப் படத்தை கிழித்துத் துவைத்து வைப்பார். படம் நன்றாக இருந்தால் இவரை போன்று பாராட்டுபவர் எவரும் இல்லை. அவருடைய விமர்சனங்களைப் பார்த்துவிட்டு அவரைப் பாராட்டுபவர்களை விட, அவரை மிகவும் கீழ் தரமாக விமர்சிப்பவர்கள் தான் அதிகம். இருந்தும் அவருடைய விமர்சன பதிவுக்காக காத்திருப்பார்கள். இவைதான் நமக்கு மாறன் அவர்களைப் பற்றி தெரியும்.
இது ஒரு புறம் இருந்தாலும், அவரின் மறுபக்கம் மிகவும் சுவராசியமானது, அது தான்
விதைக்கப்பட்டுள்ளது, இனி விரைவில் வளரும்!
அவர் சென்னைக்கு அருகில் உள்ள காரனோடை என்னும் இடத்தில் சரணாலயம் என்ற பெயரில் மரக்கன்றுகளை வளர்த்து அதனை அந்தக் கிரமத்தை சுற்றியுள்ள இடங்களில் மரங்களை நடுவது மட்டும் அல்லாமல் அதனை பாதுகாத்துக்கொண்டும் இருக்கிறார்கள். (பண உதவி செய்பவர்கள் உதவியுடன்). அவர் தன்னுடைய பேட்டியில் பசுமை நிறைந்த கிராமமாக / நகரமாக மாற்றுவது தான் தன்னுடைய இலக்கு என்று கூறியிருப்பார்.
பல வகையான மரக்கன்றுகளை வளர்த்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்
இப்பொழுது நாம் இருக்கும் காலத்தில் இந்த மாதிரியான தொண்டு செய்பவர்கள் மிகவும் அரிது மற்றும் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
அவருடைய இந்த தொண்டை வாழ்த்தி, அவர் மேலும் இதனை தொடர்ந்து செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு
https://www.saranalayamcharitabletrust.org/
இவரைப் பார்த்து மேலும் பல பேர் இதனை போன்று செய்தால் மிகவும் நல்லது.
நன்றி.
Great article… we came to know the unkown person by this article.. Maran sir hats off…
LikeLiked by 1 person
Good
LikeLike