ஸ்டாலின் – திமுகவின் தலைவர் – புதிய அவதாரம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத்தின் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இதயபூர்வமான இரங்கல் தெரிவிக்கப்பட்டு தனிச்சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த செயற்குழு கூட்டம் மூலம் செயல் தலைவர், தலைவராக உருவெடுத்துள்ளார்.