கேரளாவில் பெருவெள்ளம்!
கடவுள் தேசம் இன்று தனி தேசமாக மாறியிருக்கிறது. கன மழையினால் அங்கு இருக்கும் அனைத்து நீர்த்தேக்கங்கள் நிரம்பிச் சீறி பாய்கிறது. மழை வேண்டாம் என்றாலும் கொட்டிக்கொண்டே இருக்கிறது.
இந்த வரலாறு காணாத மழையினால் பலருடைய உடைமைகள் இருப்பிடங்கள் அவர்களின் கண் முன்னே நீரினால் அடித்துக்கொண்டு, போய்க்கொண்டு இருக்கிறது. இதில் மனித உடல்கள் உட்பட.
இயற்கையின் முன் நம்மால் எதுவும் செய்யமுடியாது என்று அனைவருக்கும் மறுபடியும் உணர்த்திய தருணம் இது. ஆனால் மனிதனின் மணம் இயற்கையின் அழிவை புதுப்பித்துக்கொண்டே இருக்கும் என்பதற்கு உதாரணமாகப் பல ஆயிரம் ஆதரவு கரங்கள் கடவுள் தேசத்தை நோக்கி நீண்டுகொண்டே இருக்கிறது. உடைமைகளையும், இருப்பிடத்தையும் மற்றும் உறவுகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு இந்த கரங்கள் சிறு ஆறுதலை கொடுக்கும் என்பது உண்மை.
மற்ற மாநிலத்தைவிட நம் தமிழ்நாட்டு மக்கள் மற்றும் அரசுக்குத் தான் அதிக கடமையும் பொறுப்பும் இருக்கிறது, தமிழ் நாட்டு அரசு தன் கடமையை நன்றாக செய்துகொண்டு இருக்கிறது அது தொடரவேண்டும். அதுமட்டும் அல்லாமல் மக்கள் கொடுக்கும் நிவாரண பொருட்களையும் பாதிப்பு அடைந்த, தேவையுள்ள மக்கள் இருக்கும் இடத்துக்கு கொண்டுசெல்வது தலையாய கடமை.
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்