சிறந்த உணவு: ஆசிப் பிரியாணி உணவகம்
புதுவையில் இருக்கும் ஆசிப் பிரியாணி (எல்லைபிள்ளைசாவடியில்), பிரியாணி பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவகம் என்றே சொல்லலாம். இங்கு, எனக்கு மிகவும் பிடித்த உணவு மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் பார்பிக்யூ (Chicken BBQ). மட்டன் பிரியாணியுடன் சிக்கன் பார்பிக்யூ அருமையான விருந்து. சிக்கன் பார்பிக்யூ மிகவும் நன்றாக இருந்தது.

பலுடா
1kg பிரியாணி வாங்கினால் குறைந்தது 8+ நபர்கள் திருப்தியாக சாப்பிடலாம். மட்டன் பிரயாணி மிகவும் அருமையாக இருந்தது அது மட்டும் இல்லாமல் ஒருவருக்கு இரண்டு அல்லது மூன்று மட்டன் துண்டுகள் வைக்கலாம்.
சாப்பிட்டு முடிந்துவிட்டு, ஆசிப் பலுடாவுடன் முடிப்பது அருமை.
பிரியாணி நன்றாக இருக்கிறது என்றால் சாப்பிட்ட அடுத்த 1 அல்லது 2 மணிநேரத்தில் நாம் அடுத்த உணவுக்காக தயாராக இருக்கவேண்டும், அப்படியில்லாமல் சில கடைகளில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு வந்தால் இரவு வரை சாப்பிடமுடியாது. இதில் ஆசிப் பிரியாணி முதல் ரகம்.
தமிழ்நாட்டில் எந்த உணவகமாக இருந்தாலும் கடைசியாக ரசம் சாப்பாட்டுடன் முடிப்பது வழக்கம். ஆனால் ஆசிப் பிரியாணி உணவகத்தில் ரசம் மற்றும் வெள்ளை அரசி சாப்பாடு இல்லை, இது மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அதுவும் குடும்பத்துடன் உணவு அருந்த வருபவர்களுக்கு. வெள்ளை சாப்பாட்டுடன் ரசம் இருந்தால் நன்று.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.