எச்சரிக்கை – உங்கள் பணம் பத்திரம்
QNetயில் பிரமிடு திட்டம் மூலமாக நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று இந்தியா முழுவதும் அதுவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இப்பொழுது வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது.
இந்த QNet லிமிடெட் முன்பு QuestNet, GoldQuest மற்றும் QI Limited என அறியப்பட்டது. ஹாங்காங்கை தலைமையகமாக கொண்ட நிறுவனம்.
QNet online shopping business என்ற பெயரில் Multi-level marketing (MLM) businessயை செய்கிறார்கள். (www.qnet.net என்ற முகநூல் இந்திய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது)
பல வருடங்களுக்கு முன் இவற்றை போன்று, Gold Coin business மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கலாம் என்று பணம் போட்டார்கள், கடைசியில் அனைத்து பணத்தையும் இழந்தவர்கள் தான் அதிகம்.
இவற்றை நிரூபிப்பது போன்று, அண்மையில் (01-04-2018) பெங்களூரில் QNetயை தடைசெய்ய வேண்டும் என்று, அதனால் பாதிக்கப்பட்ட டாக்டர்கள், மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் பொது மக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளார்கள். போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இந்த multi-level marketing (MLM) மூலம் இழந்துள்ளார்கள். இதனைப் பற்றிய செய்திகள் TimesofIndia மற்றும் TheHindu போன்றவற்றில் வந்துள்ளது.
பெரும்பாலும் MLM business மூலம், மிகவும் குறைந்த அளவிலான நபர்கள், மிகவும் அதிக பணம் சம்பாதிப்பார்கள், அவர்களைக் கண்டு நாமும் மிகக் குறுகிய காலத்தில் கோடிஸ்வரர்களாக மாறலாம் என்று நினைப்பது மிகவும் ஆபத்தான ஒன்று.
முதலில் நாம் ஒன்றைத் தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும், MLM businessயை பொருத்தமட்டில் யார் அதிகமான நபர்களை தன் பேச்சாற்றலினால் (ஏமாற்றி) அவர்களின் கீழ் இணைத்துக்கொள்கிறார்களோ அல்லது யாரைச் சுற்றி அதிகமான நம்பிக்கையுடையோர் (ஏமாந்தவர்கள்) இருக்கிறார்களோ அவர்கள் தான் அதிகமான பணம் சம்பாதிக்க முடியும்.
பிரமிடு திட்டத்தில், யார் முதலில் முதலீடு செய்கிறார்களோ அவர்கள் அதிக பணம் சம்பாதிப்பார்கள், பின்னர் இணைபவர்கள் குறைந்த பணம் சம்பாதிப்பார்கள்
ஆகையினால், இந்த மாதிரியான நமக்கு பொருத்தமில்லாத வகையில் நம் பணத்தை முதலீடு செய்து இழக்கவேண்டாம்.
இந்தப் பதிவின் நோக்கம், கோடிஸ்வரர்களாக மாறுபவர்களைத் தடுப்பது இல்லை, யாரும் தன்னையும், தன்னை நம்பியுள்ள குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களைக் கடன்காரர்களாக (பிச்சைக்காரர்களாக) மாற்றாமல் தடுப்பதுதான்.
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்
அனைவருக்கு விழிப்புணருவு ஏற்படியதுக்கு மிக்க நன்றி.
LikeLike