பரியேறும் பெருமாள் – பார்வை
ஒடுக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் பார்வையில் இருந்து இன்னோரு படைப்பு பரியேறும் பெருமாள்.
மாரி செல்வராசு அவர்களின் முதல் படைப்பு மற்றும் பா. இரஞ்சித் அவர்களின் முதல் தயாரிப்பில் வெளிவந்து இருக்கும் பரியேறும் பெருமாள் என்கின்ற படம் ஒரு நேர்த்தியான படைப்பு.
ஆணவக்கொலைகளின் பின்புறம், சாதிய அடக்குமுறை, ஒடுக்கப்பட்டுள்ளவர்களின் இன்றைய நிலை போன்றவற்றை மிகவும் கவனமாகவும் மற்றும் நேர்மையாகவும் நம்முன் திரையிட்டு காண்பித்துள்ளார் படத்தின் இயக்குநர் மாரி செல்வராசு அவர்கள்.
கதையின் நாயகன் கதிர். அவரின் அருமையான நடிப்பை இந்தப் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார், இந்தப் படத்துக்கா அவரின் முழு உழைப்பையும் வெளிப்படுத்தியுள்ளார் என்றே சொல்லவேண்டும். அந்த அளவுக்க கதிரின் உழைப்பு இந்தப் படத்தில் தெரிகின்றது.
படத்தின் வில்லன் என்று சொல்லும் அளவுக்கு ஒரு வயதான (தாத்தா) கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளவரின் நடிப்பும் மிகவும் அருமையா இருந்தது, அவர் வரும் பகுதிகள் மிகவும் மிரட்டலாக இருக்கும் (கத்தின்றி மற்றும் கத்தலன்றி). குறிப்பாகக் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் மருத்துவமனையில் பேசிக்கொண்டு இருப்பார்கள் அவர்களின் பின்புறம் மங்கலாக (blur background) வயதான கதாப்பாத்திரம் (வில்லன்) இருப்பார், நம் அனைவரின் கவனமும் அந்த மங்கலான உருவத்தை நோக்கியே இருக்கும். அந்த அளவுக்கு வில்லனின் அசத்தல் மிரட்டல்.
இந்தப் படத்தில் நடித்துள்ள மற்ற கதாப்பாத்திரங்களான, ஜோவாக கதாநாயகி ஆனந்தி, யோகி பாபு, கதாநாயகியின் அப்பா மற்றும் கல்லூரியின் முதல்வர் ஆகியோரின் நடிப்புகள் அருமை.
படத்தின் இயக்குநர் மாரி செல்வராசு அவர்கள் தன்னுடைய முதல் படத்திலே தான் ஒரு சிறந்த இயக்குநர் என்று அனைவருக்கும் நிரூபித்துள்ளார். அவருக்கும் மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நம் பாராட்டுக்கள்.
ஒரு சமுதாயம் தன்னுடைய இன்றைய நிலையில் இருந்து மேல் நோக்கி நகர்த்தவேண்டும் என்றால். அவர்களின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் முன்னேறவேண்டும். பொருளாதாரம் முன்னேற்றம் அடைய அந்தச் சமுதாயம் கல்வியறிவு உள்ள சமுதாயமாக மாற்றவேண்டும். இந்தப் படத்தில் வரும் கல்லூரியின் முதல்வரை போன்று, “நான் இந்த நிலைக்கு வருவதற்கு பேயாகப் படித்தேன்” என்பார்.
ஒடுக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் இன்றைய நிலைகளைப் படமாக எடுக்கும் அனைவரும், அவர்களின் இன்றைய நிலையில் இருந்து மேல் நோக்கி நகர அவர்களின் பொருளாதாரம் மற்றும் கல்வியின் முக்கியத்தை எடுத்துச்சொல்லி அதற்கான இன்றைய தடைகளாக இருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டி அதற்கு ஒரு தீர்வினை கொடுக்கும் படமாக இருந்தால், ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்கு நன்மைபயக்கும்.
Excellent and genuine review sir…
Arun
LikeLike
அற்புதமான படைப்பு இந்த திரைப்படம் சார்… தாழ்த்தப்பட்டோரை நடுநிலை சாதிக்காரர்கள் கீழ்சாதியாக நினைக்கிறார்கள், ஆனால் அவர்களையே கீழ்சாதியாக நினைக்கிறார்கள் இந்த பூநூல் அணிந்த “பெரியவாள்”… கல்விதான் அனைத்திற்க்கும் ஒரே பதில்…
LikeLike