உணர்வுகளும் சட்டங்களும்
சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்கின்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கேரளம் மற்றும் இந்தியாவின் விவாத பொருளாக மாற்றப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் மத்தியிலும் மிகப் பெரிய அதிருப்தி ஏற்பட்டு அது போராட்டங்களாக வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
மதம் சம்பந்தமான ஒரு சில சம்பிரதாயங்கள் மற்றும் வழிமுறைகளைச் சட்டத்தின் மூலம் மாற்ற நினைப்பதின் விளைவு, மக்கள் மத்தியில் குழப்பங்களுக்கும் மற்றும் போராட்டங்களுக்கும் வழி வகுக்கும். இப்படியான போராட்டங்கள் அண்மைக் காலங்களில் இந்தியாவில் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. இது மிகவும் வருந்தத்தக்கது.
இதற்கிடையில், மதத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு அவர்களின் அரசியல் விளையாட்டை விளையாட தொடங்கிவிடுவார்கள். சபரிமலையில் இப்படியான விளையாட்டு ஆரம்பமாகி கொண்டிருக்கிறது.
பாராளுமன்றத்தின் முழு அதிகாரத்தை கொண்டு அவசரச் சட்டத்தை இயற்றினால் இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரலாம். ஆனால் இந்த அவசரச் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு தயங்குகிறது. ஏன்? என்பதுதான் நம்மிடம் உள்ள இப்போதைய மிகப்பெரிய கேள்வி.