சர்கார்
(இளைய)தளபதி விஜய், ஏ.ஆர்.ரகுமான், சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் முருகதாஸ் ஆகிய நான்கு இமயங்கள் இணைந்து சர்கார் என்ற பிரம்மாண்ட படைப்பை வரும் தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியிட இருக்கும் இந்தச் சமயத்தில், முருகதாஸ் அவர்களுக்கு எப்போழுதும் வரும் கதை என்னுடையது என்ற பிரச்சனை இந்தப்படத்திற்கும் வருண் ராஜேந்திரன் மூலம் வந்துள்ளது.
இன்று பல திரைமறை சமரசத்துக்குப் பிறகு பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருண் ராஜேந்திரன் அவர்களின் கோரிக்கையை ஏற்று அவருடைய பெயரையும் படத்தில் இணைத்துள்ளார்கள்.
வருண் ராஜேந்திரன் தனது பேட்டியில் விஜய் சர்கார் அமைக்க என்னுடைய செங்கோலை பரிசாக அளிக்கிறேன் என்றார்.
தீபாவளிக்கு சர்கார் படம் வெளியிடப்படும் என்ற செய்தி, அனைத்து விஜய் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாகவே இருக்கும்.
திரை உலகில் விஜய் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். கடந்த கால படங்கள் மற்றும் இல்லாமல் இந்த படத்துக்கும் இலவசமாக விளம்பரம் கிடைத்துள்ளது.
இலவச விளம்பரம் தொடரட்டும்.
Always ARM doing copy cat…
LikeLike
Yes. Really lucky enough to get free Ad
LikeLike