டெங்கு – வருமுன் காப்போம்
பெரும்பாலும் டெங்குக் காய்ச்சல் மழைக்காலங்களில் அதிகமாகப் பரவும். டெங்குவினால் அதிகமான உயிர்ப்பலிகள் வருடம் தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நோயினால் அனைத்துத் தரப்பு மக்களும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளையும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த வருடமும், அதிகமானோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் பற்றி அதிகமான விழிப்புணர்வுகளை மக்களுக்கு நாம் எடுத்துக் கொண்டு சென்றால் மட்டுமே உயிரிழப்புகளை குறைக்க முடியும்.
டெங்கு காய்ச்சல் என்றால் என்ன
டெங்கு என்னும் வைரஸ் கிருமியால் காய்ச்சல் ஏற்படுவதால் இதற்கு டெங்கு காய்ச்சல் என்று பெயர். இதற்கு தமிழில் எலும்பு முறிவுக் காய்ச்சல் என்று பொருள். எலும்பு முறிவின் போது ஏற்படும் வலியை போன்று இந்தக் காய்ச்சல் வந்தால் நமக்கு வலி ஏற்படும். ஆகையினால் தான் இதற்கு எலும்பு முறிவு காய்ச்சல் என்று பெயர்.
டெங்கு நோய் ஏடிஸ் எஜிப்தி கொசுவினால் மட்டுமே வரக்கூடிய நோய். இது தொற்று நோய் போன்று தண்ணீர் மற்றும் காற்று மூலம் பரவாது.
ஏடிஸ் எஜிப்தி கொசு
டெங்கு காய்ச்சல் எடிஸ் எஜிப்தி கொசு கடிப்பதினால் (குறிப்பாகப் பெண் கொசுவினால்) இந்த நோய் பரவுகின்றது.
இந்த கொசு சுத்தமான நீரிநிலைகளில் வளரக் கூடியவை மற்றும் பெரும்பாலும் இந்த கொசு மாலை அல்லது பகல் நேரங்களில் தான் கடிக்கும்.
நோய் அறிகுறிகள்
டெங்கு நோய் அனைத்து வயதினருக்கும் வரலாம். குறிப்பாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இந்த நோய் எளிதில் பரவும்.
- திடீரென கடுமையான காய்ச்சல்
- அதிகமான தலைவலி
- கண்களுக்குப் பின்புறம் வலி
- வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண் கூசுதல்
- உடலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றுதல்
- எலும்புகளை முறித்துப்போட்டதைப்போன்று கடுமையான வலி
டெங்கு வரும்முன் காக்கும் வழி
டெங்கு காய்ச்சல் கொசுவினால் வருவதால், நம் வீடு மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொசுகள் வளர வாய்ப்பு இல்லாமல் பார்த்துக்கொண்டாலே இந்த நோய் வராமல் தடுக்கலாம்,
குறிப்பாக நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தமான நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மற்றும் கொசுக்கள் நம்மை கடிக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை கடைப்பிடிப்பது மேலும் சிறந்தது.
முன் ஏற்பாடுகள்
- நிலவேம்பு கஷாயம்
- ஆடாதோடா இலை குடிநீர்
- பப்பாளி இலைச்சாறு
இது போன்ற குடிநீரினால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கச் செய்யும். நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் இருந்தால் டெங்கு போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்கலாம்.
முக்கிய கவனத்துக்கு
குறிப்பாக மழைக்காலங்களில், லேசான காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது தான் சிறந்த வழிமுறை.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும்
Good one.
LikeLike
Very useful message.
LikeLike
Superb
LikeLike