குணசேகரன் – நெறி பிறழாத நெறியாளர்

தமிழ்நாட்டில் இருந்து ராம்நாத் கோயங்கா விருதைப் பெற்ற முதல் நெறியாளர் திரு. குணசேகரன் என்கின்ற குணா (நியூஸ் 18 தமிழ்) அவர்களுக்கு எங்களின் பாராட்டு கலந்த நல்வாழ்த்துக்கள்.

தொலைக்காட்சி விவாதங்களில் நெறியாளர்களில் மிகவும் உயர்ந்து இருப்பவர் திரு. குணா அவர்கள். தன்னுடைய நேர்த்தியான திறமையினால் விவாதங்களை அதிக சத்தம் இன்றி அனைவருக்குமான விவாத தளங்களா வழிநடத்துவார். விவாதத்தில் அவரை பற்றிய தனிப்பட்ட விமர்சனங்களை சாதுரியமாகவும் புன்னைகையுடனும் எதிர்கொள்ளும் விதம் நம்மை வியக்கும் விதமாக இருக்கும்.
அவர் ஒரு நெறியாளராக நிமிர்ந்து நின்ற தருனம் அனிதா அவர்களுக்காக உறுதுணையாக இருந்த தருணம் என்றே சொல்லலாம். எளியவர்களுக்காக ஊடகங்கள் மூலம் அவருடைய உதவிக்கரங்கள் எப்போழுதும் இருந்து கொண்டு இருப்பது கூடுதல் சிறப்பு
ஒரு தனி மனிதனுக்கு கிடைக்கும் எந்த ஒரு விருது ஆனாலும் அதற்கு பின்னால் ஒரு குழுவின் உழைப்பு இருக்கும் என்ற நிதர்சன உண்மையை சொல்பவரே மேன்மக்கள். அதிலும் குணா அவர்கள் தனித்து நிற்கிறார் என்பதற்கான உதாரணம் அவர் கீழே கூறிப்பிட்டுள்ள வார்த்தைகள்.
இந்த விருது எனது தனித்திறமை, அறிவுக்கு கிடைத்தது அல்ல. என்னுடன் பணியாற்றும் எண்ணற்ற பல நண்பர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடும் சலிப்பின்றியும் களத்தில் ஆற்றிய கடும் பணிக்கு கிடைத்த அங்கீகாரம். இந்த அங்கீகாரமும் விருதும் அவர்கள் எல்லோருக்குமானது. கூட்டு உழைப்பின் கனியை அவர்கள் சார்பில் நான் பெற்றிருக்கிறேன் அவ்வளவே.
குணசேகரன்
ஊடகத்துறையில் நெறி பிறழாத நெறியாளர் என்று பெயர் எடுப்பது மிகுவும் அரிது, ஆனால் குணா அவர்கள் நெறி பிறழாத நெறியாளர் என்ற பெயர் எடுத்து மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டா இருக்கிறார்.
அவருடைய ஊடகத்துறையில் நேர்மை, மற்றும் எளியோருக்கான ஊடகம் என்ற வழியில் மேலும் சிறப்புடன் பணியாற்ற எங்களின் வாழ்த்துகள்.
Congrats Guna sir….
LikeLike