மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்
பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருகிறோம் என்று சொல்லிக்கொண்டே 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடைமுறைப் படுத்துகின்றார்கள். 10 மற்றும் 11 வயதில் மாணவர்களை பொதுத் தேர்வின் மூலம் தரம் பிரிப்பது என்பது மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயலாகும்.

பொதுத் தேர்வினால் தான் மாணவர்களின் அறிவை சோதிக்க முடியும் அல்லது வளர்க்க முடியும் என்று நினைப்பது அறிவற்ற செயல்
மாணவர்களின் அறிவுத் திறமையை பொதுத் தேர்வினால் கண்டறிய முடியாது என்று அறிந்து பல நாடுகளில் பொதுத் தேர்வு முறையைக் கைவிடுகிறார்கள், அதுவும் பள்ளிப் படிப்பில் பொதுத் தேர்வு எழுதும் முறையே இல்லை என்றே சொல்லலாம். ஆனால் நாம் பொதுத் தேர்வினை அதிகமாகிக்கொண்டே செல்கிறோம். இது தேவையற்ற ஒன்று.
பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தாழ்வு மனபான்மை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல், மாணவர்களின் பள்ளிப்படிப்பு பாதியில் முடிவுக்கு வரும். ஆகையால் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் படிப்பறிவு இல்லாத சமுதாயம் அதிகரிக்கும்.
இப்பொழுது உள்ள தலைமுறையில் தான், முதல் தலைமுறை பட்டதாரிகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் நல்ல வேலைக்குச் சென்று அவர்களின் வாழ்வாதாரம் முன்னேறிக்கொண்டுருக்கிறது. அதனை அடியோடு அழித்துவிட்டு பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களைத் தரம் பிரித்து நாள் கூலி வேலைக்கு அனுப்ப அரசாங்கமே வழிவகுக்கின்றது.
ஆராய்ந்த தகவல். மிக சிறப்பு.
LikeLiked by 1 person
அருமை!
LikeLiked by 1 person