இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு
இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் நாளை மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடிக்கொண்டு இருக்கையில், அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் மற்றும் 4 விடுதிகள் உட்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு இலங்கையில் நிகழ்ந்து இருக்கிறது.
இந்த குண்டுவெடிப்பில் 200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளார்கள் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்துள்ளார்கள். இலங்கையில் விடுதலை புலிகளுடனா இறுதிப் போருக்குப் பிறகு நடைபெறும் மிகப் பெரிய தாக்குதல் இது.


இந்த குண்டுவெடிப்பினால் தன் குழந்தைகளையும், சக குடும்ப உறுப்பினர்களையும், உறவினர்களையும் இழந்து தவிப்பவர்களுக்கு நாம் ஏப்படி ஆருதல் சொல்வது என்றே தெரியவில்லை.

ஈஸ்டர் நாளை மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடிக்கொண்டு இருந்தவர்களை எந்த ஒரு ஈவு இரக்கம் இன்றி கொண்று குவித்துள்ளவர்களை என்னவென்று சொல்வது. இந்த உலகத்தில் மனித மிருகங்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.
கீழேயுள்ள படத்தை பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீர் நிச்சயம். கடவுளே கொடிய மனித மிருகங்களிடம் இருந்து எங்களை காப்பாயாக.

This is Shocking news from SriLanka really affected people. Wht are they getting to killed by people..!! Just Shame on those who r antihuman do like this kind of activity.
LikeLike
This is Shocking news from SriLanka really affected people. Wht are they getting to killed by people. Just Shame on those who r antihuman do like this kind of activity.
LikeLike