தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் – புயலாக மாற அதிக வாய்ப்பு
வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது அடுத்த இரண்டு நாட்களில் புயலாக மாறி 30 ஆம் தேதி தமிழகத்தை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் அது வலுப்பெற்று வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
புயலாக மாறினால் அதற்கு ஃபனி (Cyclone Fani) என பெயரிடப்படும். இந்த புயல் 30-ம் தேதி தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு உள்ளது.
புயல் கரையை கடக்கும்போது 90 கிமீ முதல் 100 கிமீ வேகத்தில் காற்று வீசும். இதனால், பல இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
