தலைப்புச் செய்தி – மநீம தலைவர் கமலஹாசன்
இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சால் இன்று தலைப்புச் செய்தியாக இருக்கிறார்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமலஹாசன் அவர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய முழுவதும் பேசும் பொருளாக மாறி இருக்கிறார்.
அரவக்குறிச்சி சட்டசபை இடைத் தேர்தலையொட்டி, தேல்தல் பிரச்சாரத்தின் போது பேசிய கமலஹாசன், தீவிரவாத்திற்கு மதம் சாயம் பூசக்கூடாது என்கிற கருத்தை வலியுறுத்தி பேசும்போது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என்றும், அவர் ஒரு இந்து என்றும் தெரிவித்தார்.
இந்து தீவிரவாதி என்று எப்படி சொல்லலாம் என்று நாடு முழுக்க பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என்பதுதான் பொதுவானவர்களின் கருத்து, ஆனால் இங்கு கோட்சே தீவிரவாதி அவர் ஒரு இந்து என்று சொன்னவுடன் கோபத்தின் உச்சிக்கு சென்றவர்கள் தான், மூச்சுக்கு முன்னூறு தடவை முஸ்லீம் தீவிரவாதி, இஸ்லாம் பயங்கரவாதி என்று சொன்னவர்கள். இங்கு வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகின்றது தனக்கு வந்தால் இரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.
கமலஹாசன் பேசியது சரியா என்றால், தவறு என்று தான் சொல்லவேண்டும்.