நேற்று அதிமுக, இன்று திமுக!
கடந்த ஐந்து வருடம் அதிமுக தான் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது, ஆனால் இன்று 2019ம் நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை திமுக பெற்றுள்ளது.
கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற ஆளுமைகள் இல்லாமல் நடைபெற்ற இந்த 17ஆவது நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் மற்றும் யாருடைய தலைமையை தமிழகம் அங்கீகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. இதில் 100 சதவிகிதம் வெற்றியை பெற்றுள்ளார் திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின்.
திமுகவின் இந்த மாபெரும் வெற்றியினால் தமிழகத்துக்கு என்ன பயன் கிடைக்கும் என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும். இந்த வெற்றியின் மூலம் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் குறிப்பாக திமுகவின் அடுத்த ஆளுமை நான்தான் என்று இந்த வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளார்.


மு.கருணாநிதியை போன்று வெற்றி கூட்டணி அமைத்து அனைவரையும் அரவணைத்து சென்றதனாலேயே இந்த மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. இதன் மூலம் மு.க. ஸ்டாலின் தன் தந்தையை போன்று அரசியல் சாணக்கியன் என்ற பெயர் எடுத்துள்ளார். மற்றும், இந்தியாவில் உள்ள மற்ற மாநில கட்சியின் தலைவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
எப்படி திமுகவுக்கு கூட்டணியினால் மாபெரும் வெற்றி கிடைத்ததோ அதனைப் போன்று அதிமுகவிற்கு கூட்டணியினால் மாபெரும் தோல்வி அடைந்துள்ளது

ஜெயலலிதா இருக்கும் பொழுது கூட்டணி அமைப்பதில் மிகவும் கவனமாக இருப்பார். யாருடன் கூட்டணி வைக்கவேண்டும் என்பதைவிட யாருடன் கூட்டணி வைக்ககூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். ஆகையினாலேயே அவருக்கு வெற்றி கிடைத்தது.

தேர்தல் நெருங்கும் வரை மிகவும் கடுமையாக விமர்சித்த பாமகவுடனா கூட்டணி அதிமுகவிற்கு குறிப்பாக வட தமிழகத்தில் பின்னடைவை கொடுத்தது.
அதனை போன்று பாஜகவுடான கூட்டணி. ஜெயலலிதா அவர்களே பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு தயங்கினார் என்றே சொல்லவேண்டும். ஜெயலலிதா மற்றும் மோடி அவர்களுக்கு நெருங்கிய நட்பு இருந்தபோதும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடியா அல்லது இந்த லேடியா என்று சொல்லியே வாக்கு சேகரித்தார், மிகப்பெரிய வெற்றியையும் அடைந்தார்.
இப்படியாக ஜெயலலிதா அவர்களே பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு தயங்கிய நிலையில், இப்போழுது ஜெயலலிதா அவர்கள் இல்லாத இந்த சூழ்நிலையில் பாஜகவுடன் கூட்டணியமைத்து போட்டியிட்டது அதிமுகவுக்கு தேர்தலில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவின் தவறான கூட்டணியினால் இன்று மிகப்பெரிய தேல்வியை சந்தித்துள்ளது.
Congrats M.K Staline for great victory…
LikeLike
Congrats and wishing Mr.Stalin all the best…
LikeLike