நீட் – தற்கொலை தொடருகிறது, யார் காரணம்?
இன்று மருத்துவ மற்றம் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் தமிழகத்தில் சுமார் 1.35 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 59,785 பேர் அதாவது 48.57% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 75,000 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வினால் இந்த வருடமும் இரண்டு மாணவிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துள்ளார்கள். ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து விட்டு, நீட் தேர்வில் தேர்ச்சியடையவில்லை என்பதனால் ஏற்படும் மன உளைச்சலே இப்படியான தற்கொலைக்கு முக்கிய காரணங்களாக அமைகிறது. அனிதா உட்பட
நீட் தேர்வின் இன்றைய நிலை
நகரங்களில் உள்ள மாணவர்களுக்கும் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கும் இடையில் நடக்கும் தேர்வாக,
பணம் வைத்துள்ளவர்களுக்கும் பணம் இல்லாதவர்களுக்கு இடையில் நடக்கும் தேர்வாக,
தனியார் பள்ளிக்கும் அரசுப் பள்ளிக்கும் இடையில் நடக்கும் தேர்வாகவே நீட் தகுதி தேர்வு இருக்கிறது.
கிராமங்களில் உள்ள அரசப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது கானல் நீரைப் போன்று உள்ளது. ஆனால் நகரங்களில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வின் தேர்ச்சி சாதகமாக இருக்கிறது.
இன்றைய நீட் தகுதி தேர்வு, 6 வயது சிறுவனுக்கும் 17 வயது சிறுவனுக்கும் இடையே நடக்கும் ஓட்டப்பந்தயத்தை போன்று உள்ளது. இதற்கு காரணம் யார்?
அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டு நீட் என்னும் தகுதி தேர்வை நடத்துவது சாலச் சிறந்தது.
கல்வி முறையில் பல முரண்பாடுகளை வைத்துக்கொண்டு இந்திய அளவில் தகுதி தேர்வுகள் நடத்துவது முறையாக இருக்குமா என்பதனை மத்திய அரசும், மாநில அரசும் நேர்மையாக சிந்திக்க வேண்டும்.
கடைசி கேள்வி
அனிதாவை போன்று, இந்த வருடம் ரிதுஸ்ரீ மற்றும் வைஷியா என்கின்ற மாணவிகளை நாம் இழந்துள்ளோம்.
இந்த மாணவிகளை நாம் இழந்ததுக்கு யார் காரணம்,
சம வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்காத மத்திய மற்றும் மாநில அரசுகளா?
இல்லை
மருத்துவ படிப்பு தான் தங்கள் பிள்ளைகளின் கடைசி இலக்கு என்று சொல்லி வளர்த்த பெற்றோர்களா?
Final question is superb
LikeLike
My answer is parents. They have to educate and motivate their childrens.
LikeLike
We have situation where 1 student from the same class clears and the other flunks. Does this mean that the standard of education is not good or is it each individuals capability. Parents should have regular check on their kids capability and groom/advice them on their aim and goal. Die for the dream shows how badly the kids are groomed. Learn what to dream and live to that is what kids are to be taught.
Note: while we have lost 2 kids which is really sad and heart breaking, we also should share our wishes to the one who came as topper across India, hailing from Tamil Nadu.
Thanks for the post Thaj. Good one.
LikeLike
ம௫த்துவ படிப்பு உயர்ந்தது என்ற பகுத்தறிவு
LikeLike
Parents shouldn’t force their dreams to children, allow them to take decisions their own.
Very sad to hear……
LikeLike