ஆழ்துளை கிணறு – குழந்தைகளின் சாபக்கேடு
திருச்சியில் உள்ள மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்க இரவு பகல் பாராமல் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது குழந்தை சுஜித்தை மீட்டுவிடுவார்கள் என்று அனைத்து தரப்பு மக்களுடன் நாமும் நம்பிக்கையுடன் காத்து கொண்டிருக்கிறோம்.
ஆழ்துளை கிணறு மரணங்கள் தொடர்கதையாக இருக்கிறது, இதற்கு முன் நடந்த மரணங்களில் இருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பதுதான் அனைவருக்கும் இருக்கும் இப்போதைய மிகப்பெரிய கேள்வி.
அதுமட்டுமில்லாமல், குழந்தை கிணற்றில் தன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கையில், மேலே நாம் குழந்தையை எப்படி மீட்பது என்று தெரியாமல் பல மீட்பு குழுக்களின் ஆலோசனையின் கீழ் சோதனை செய்துக் கொண்டிருக்கிறோம். நம் நோக்கம் எப்படியாவது அந்த குழந்தையை மீட்டு விடுவது தான் என்றாலும் சோதனைகளை ஒரு உயிரை வைத்து தான் செய்யவேண்டுமா என்று மனம் பதைபதைக்கிறது.
மக்கள் ஒரு அசம்பாவிதம் நடந்தவுடன் பதைபதைப்பார்கள், ஆனால் அரசு அசம்பாவிதம் நடக்கும் முன் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதுவும் நமக்கு முன்னுதாரணங்கள் இருக்கையில் இன்னும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதற்கு பிறகாவது, நம்முடைய அரசு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தங்களுடைய கடைமைகளை செவ்வனே செய்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இது ஒருபுறம் இருந்தாலும், இந்த ஆழ்துளை கிணறு மரணம் ஒரு தனி மனிதனின் அலட்சியத்தினால் ஏற்பட்டது என்பதை எவராலும் மறுக்க முடியாது. தனி மனிதனின் அலட்சியத்தினால் ஒரு உயிர் போகும் என்றால், அந்த தனிமனிதனுக்கு சட்டத்தின் தண்டனையை மிகவும் கடுமையாக வேண்டும்.
கடந்த இரண்டு நாட்களாக ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் படும்பாடு இனி எந்தக் குழந்தைக்கும் இந்த நிலை வரக் கூடாது என்று அந்த ஆண்டவனை பிரார்த்திப்போம்.
குழந்தை சுஜித் எப்படியாவது மீட்கப்படுவான் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கிறோம்.
தாஜூதீன்
1. பெற்றோர்களின் அஜாக்கிரதை…
2. No action plans by govt. even after so many incidents…
3. Individuals carelessness to close the borewell…
In future, no one should face the same issue 😦
LikeLike
1. பெற்றோர்களின் அஜாக்கிரதை…
2. No action plans by govt. even after so many incidents…
3. Individuals carelessness to close the borewell…
In future, no one should face the same issue…
LikeLike