உடல்நலம்

தொப்பையை குறைக்க எளிய வழிமுறைகள்

இப்போழுது உள்ள உணவு முறைகள் மற்றும் கடின உடல் உழைப்பின்றி இருப்பதினால் தொப்பை எளிதில் அனைவருக்கும் வந்துவிடுகிறது. தொப்பை பிரச்சினையில் இருந்து நம்மை காத்துக் கொள்ள கீழே உள்ள சில டிப்ஸ்களை பின்பற்றுங்கள்

இஞ்சி உடன் எலுமிச்சை சாறு:
தினமும் இஞ்சி போட்டு கொதிக்க வைத்த வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வர, ஒரே வாரத்தில் உடல் எடை குறைவதை காண்பீர்கள். இதிலுள்ள சிட்ரிக் அமிலம், மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த விட்டமின் ‘சி’ கொழுப்பை வேகமாக கரைக்கும்

அன்னாசிப் பழம்: 
உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு மிகச் சிறந்த பழங்களில் அன்னாசி முக்கியமானது. இதிலுள்ள ப்ரோமைலைன் கொழுப்பை வேகமாக குறைக்கிறது. ஜீரண சக்தியை அதிகமாக்கும். அன்னாசி கலோரி மற்றும் கொழுப்பை உடனுக்குடன் எரிப்பதால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
அன்னாசிப் பழம் சூட்டைத் தரும், அதனால் அளவாகத்தான் சாப்பிட வேண்டும்.

தக்காளி: 
கொழுப்பை கரைப்பதில் தக்காளிக்கு ஈடு கிடையாது என சொல்லலாம். தக்காளி துரிதமாகவும் செயல்படும். இதிலுள்ள லைகோபீன் வேகமாக மெட்டபாலிசத்தை தூண்டுகிறது. இதனால் கொழுப்பு சேமிக்காமல் எரிக்கப்படுகிறது. எனவே, தக்காளியை ஜூஸாகவோ அல்லது சூப்பாகவோ எடுத்துக் கொண்டால் நல்ல பலன் தெரியும்.

திராட்சை: 
உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதில் திராட்சை சிறந்த பலனைத் தருகிறது. திராட்சையில் உள்ள கார்போஹைட்ரேட் எனர்ஜியை தருகிறது. காலை உணவுடன் ஒரு கப் திராட்சை எடுத்துக் கொண்டால், இவை மற்ற உணவுகளையும் எளிதாக செரிக்கச் செய்திடும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s