நினைவுகள் 5 – நசிமுதீன்
03-02-2020

இன்று (03/02/2020) பிறந்த நாள் கொண்டாடும் நசிமுதீனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
ஞாயிற்றுக்கிழமை (03/02/2008) மதியம், சுமார் 12 மணியளவில் என்னுடைய மாமியாரிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு, “பாத்திமாவுக்கு பிரசவ வலி போன்று இருக்கிறது, நாங்கள் MHக்கு (புதுச்சேரி அரசு பெரிய மருத்துவமனைக்கு) போகிறோம், நீங்கள் சீக்கிரம் வந்து விடுங்கள்” என்று அவர்களுக்கே உண்டான பதட்டத்துடன் சொன்னார்கள்.
நான் என்னுடைய அம்மாவிடம் இதனை சொல்லும்பொழுது, இப்பொழுது தான் எட்டு மாதம் முடியப் போகிறது, அதற்குள் பிரசவ வலியா என்று சொல்லிவிட்டு, மேலும் உன்னுடைய முதல் குழந்தையும் உன்னைப் போன்று குறைப்பிரசவத்தில் தான் பிறப்பான் போல என்று சிரித்துக்கொண்டே சொன்னார்கள். நாங்கள் (நான், அம்மா மற்றும் பாவா) வேகமாகப் புறப்பட்டு புதுச்சேரி பெரிய மருத்துவமனைக்கு வந்தடைந்தோம்.
நாங்கள் மருத்துவமனைக்கு வருவதற்க்குள், என்னுடைய மனைவியை அறுவைசிகிச்சைக் கூடத்துக்கு கொண்டுச்சென்றுவிட்டார்கள். என்னுடைய மாமியார் முகத்தில் ஒருவிதமான பரப்பரப்பு இருந்தது. நான் அவர்கள் அருகில் வந்தவுடன் அவர்களுக்கு இருந்த பரபரப்பு அதிகமாகி, என்னிடம், “வாங்க உங்கள் கையெழுத்து கேட்டார்கள்” என்று என்னை அறுவைச்சிகிச்சை செய்யும் இடத்தின் அருகில் நின்றுக் கொண்டிருந்த செவிலியரிடம் கொண்டு சென்றார்கள். அதுவரை என்னிடமிருந்த அமைதி விலகி என்னுடைய மாமியரிடம் இருந்த பரபரப்பு பத்து மடங்காக எனக்கு ஒட்டிக்கொண்டது.
பரபரப்பு பத்து மடங்கு ஆவதற்கு மிக முக்கிய ஒரு காரணம் இருக்கிறது. என்னுடைய மாமியாருக்கு அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு துளியும் விருப்பம் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. பொதுவாக முதல் பிரசவம் தாய் வீட்டின் விருப்பப்படிதான் நடக்கும், மேலும் அவர்களுக்கு ஏற்ற மருத்துவமனையில்தான் சேர்ப்பார்கள், அதனை போன்று தான் என் மாமியரும் புதுவையில் பிரசவத்திற்கு என்று மிகவும் பிரபலமான மருத்துவமனையில்தான் சேர்க்கவேண்டும் என்று சொன்னார்கள். (அந்தப் பிரபலமான மருத்துவமனையில் தான் நான் பிறந்தேன் என்பது தனிக்கதை) நான் தான் விடாபிடியாக அரசு மருத்துவமனையில் தான் சேர்க்க வேண்டும். அப்போழுதான் அறுவை சிகிச்சையின்றி சுகப்பிரசவம் ஆகும் என்று சொல்லிவிட்டேன்.
நான் அப்படி சொல்வதற்கு இன்னோரு முக்கிய காரணம், இரண்டு வருடத்திற்கு முன் என் தங்கையின் முதல் குழந்தைக்கு அதே பிரபலமான மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள், அங்கு சேர்க்காமல் அரசு மருத்துவமைனயில் சேர்த்தேன், என் தங்கைக்கு சுகப்பிரசவம் ஆனது. அதன் காரணமாக தான் என் மனைவியையும் அரசு மருத்துவமனையில் தான் சேர்க்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். என்னுடைய மாமியரும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்கள். இப்பொழுது புரிகிறதா, ஏன் பத்து மடங்கு பரபரப்பாக இருந்தேன் என்று.
என் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என்று கையெழுத்துப் போட்டுவிட்டு என்னுடைய மாமியாரிடம் ஏன் மாமி சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்யவில்லையா என்றேன், அதற்கு அவர்கள், முயற்சி செய்தார்கள் ஆனால் பனிக்குடம் உடைந்ததனால் வேறு வழியின்றி அறுவை சிகிச்சைக்கு இங்கு கொண்டுவந்துட்டாங்க என்று சொன்னார்கள். அரசு மருத்துவமனை என்பதால் எங்களுக்கு பனிக்குடம் உடைந்தது என்று சொன்னதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல், அனைவரும் வெளியே மனவலியோடும், என் மனைவி உள்ளே உடல் வலியோடும் அரைமணி நேரம் கடந்தது.
உங்கள் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது மற்றும் தாய் நலமுடன் இருக்கிறார்கள் என்று செவிலியர் வந்து சொன்னது தான் தாமதம், எங்கள் அனைவருக்கும் இனம் புரியாத மகிழ்ச்சி பரவியது. அதுவும் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை இங்கு விவரிக்க முடியாது, அவ்வளவு மகிழ்ச்சி. சிறிது நேரத்தில் குழந்தையை எங்களிடம் காட்டினார்கள். அப்படி காட்டும் பொழுது, குழந்தையின் இரு கருவிழிகளும் சுற்றி சுற்றி எங்களைப் பார்த்தது. இன்றும் என்னுடைய அம்மா, நசீமிடம் இதனை சொல்லிக்காட்டுவார்கள்.
உடல் நடுங்க, அரை மயக்கத்துடன் என் மனைவியை குழந்தையுடன் அருகிலுள்ள வார்டுக்கு மாற்றினார்கள். என் தங்கைகளுக்கு மற்றும் அனைத்து உறவினர்களுக்கும் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்தோம் மற்றும் நாங்கள் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த இரு பெயர்களில் (பெண் மற்றும் ஆண் பெயர்கள்) நசிமுதீன் என்ற பெயரை வைக்க ஏற்பாடுகளை செய்யதொடங்கினோம்.
மறுநாள், உறவினர்கள் படைசூழ, திருக்கனூர் ஹஜ்ரத் (முகமது அலி ஜின்னா) அவர்கள் பாங்கு சொல்லி, தேனை நாக்கில் தடவி நசிமுதீன், நசிமுதீன், நசிமுதீன் என்று மூன்று தடவை சொல்லி பெயர் வைத்தார்கள்.
தாஜூதீன்
Nicely narrated, sir….
LikeLiked by 1 person
Happy birthday, Nazimudheen…
LikeLiked by 1 person
Happy birthday nazimudeen
LikeLiked by 1 person
Happy b day…. Nazeemudeen..
LikeLiked by 1 person
I am always telling my first God is my father and mother
LikeLiked by 1 person
Happy b day Nazeemudeen….
LikeLiked by 1 person
Happy birthday dear Nazeemudeen.
LikeLiked by 1 person
Very grate experience… Thanks for sharing such a beautyful movement… please tell my delated wishes to Najumudeen.
INSHA ALLAH, GOD WILL GIVE ALL GLORY TO HIM.
LikeLiked by 1 person
Masha Allah… Belated wishes… God bless you (Nazimudeen) and all…🤲
LikeLike
Arputham sir
LikeLike
Excellent narration and wish you a happy birthday to you Nazeem…
LikeLike
Happy birthday to you nazeem
LikeLike