பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்
08/03/2020
இன்று பெண்கள் தினம் கொண்டாடும் அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்.
இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் அவர்களின் முழு திறன்களையும் (உழைப்பையும்) கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் இல்லாத துறைகளை காண்பாது மிக அரிது, இதற்கு மிக முக்கிய காரணம் பெண்களின் கல்வியறிவு, கடின உழைப்பு மற்றும் அவர்களின் தனி ஆளுமை திறமை. அவர்களுக்கு இருக்கும் பல தடைகளை அவர்களே உடைத்தெறிந்து அவர்களுக்கான இடங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
பெண்களுக்கு இயற்கையாகவே ஆளுமைத்திறன் அதிகம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருந்து இருக்காது. பல தலைமுறையாக பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதின் விளைவாக பெண்கள் வீட்டுக்குள்ளே அவர்களின் ஆளுமைகள் முடங்கி இருந்தது. இன்று கல்வியறிவினால் அவர்களின் திறமைகள் வீட்டையும் தாண்டி பல துறைகளில் தங்களின் முத்திரைகளை நிலை நாட்டுகிறார்கள்.
பெண்களுக்கு மிகவும் கடினமான காலம் என்பது 23 வயதிலிருந்து 32 வயதுவரை. இந்தக் காலகட்டத்தில்தான் பெண்களின் வாழ்வியல் மாற்றங்கள் நடைபெறுகின்றது. தன் கல்வி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்வது, திருமணம், குழந்தைகள் என பெண்களின் வாழ்வியலில் பல மாற்றங்கள் ஏற்படும் காலங்கள். இன்று இந்த கடினமான காலத்தையும் பல பெண்கள் தங்களுடைய தனி திறமையுடன் வென்று சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் தன்னுடைய சிறகுகளை மறைத்துக்கொண்டு வீடுகளில் முடங்குகிறார்கள்.
இந்த தினத்தில், ஒரு அப்பாவாக, அம்மாவாக, அண்ணனாக, தம்பியாக, தங்கையாக, கணவராக, மாமியாராக, கணவரின் தங்கையாக மற்றும் மாமனாராக ஒரு உறுதிமொழியை எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த காலகட்டத்தை கடக்கும் தங்கள் வீட்டின் பெண்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் கனவு பாதையில் தடையின்றி தன் சிறகை விரித்து பறக்க உறுதுனையாக இருப்போம் என்று.
பெண்களே! இந்த தடைகளும் கடந்து போகும் அடுத்த தலைமுறையிலிருந்து…
பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்.
தாஜூதீன்