தேமுதிகவின் இன்றைய நிலை
10.03.2020
மாநிலங்களவைக்கு அறிவித்துள்ள அதிமுக வேட்பாளர்களில் தேமுதிக கட்சிக்கு இடமில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
ஜெயலலிதா இன்று இருந்திருந்தால் அனைத்து வேட்பாளர்களும் அதிமுகவின் தொண்டனையே வேட்பாளராக அறிவித்து இருப்பார். ஆனால் இன்று 2 வேட்பாளர்களை அதிமுக தன்வசம் வைத்துக்கொண்டு, ஒன்றை ஜிகே வாசனுக்கு (பிஜேபிக்கு) கொடுத்துள்ளதிலிருந்து அதிமுக தனது பாதையை இப்போழுதுள்ள சூழ்நிலைக்கு தகுந்தாற் போன்று மாற்றியமைத்துக் கொண்டுள்ளது என்பதை நிரூப்பித்துள்ளது.
இந்த முடிவினால் தேமுதிகவை நிலைகுலைய வைத்துள்ளது என்றே சொல்லலாம். அதிமுக தேமுதிகவின் முடிவுரையை எழுதிக் கொண்டிருக்கிறது. இதனை அந்த கட்சி எப்படி எதிர்கொள்ளும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தேமுதிகாவுக்கு அதிமுகவை விட்டால் அடைக்களம் தேட எதிரில் எந்த கட்சியும் இல்லை என்பதுதான் நிதர்சனமான இன்றைய உண்மை.
தேமுதிகவின் இன்றைய நிலையை அந்த கட்சியை எதிர்பாத்திருக்காது. 2016யில் தேமுதிகவின் நிலைக்கும், இன்றைய நிலைக்கும் அதிகம் வித்தியாசம். அன்று அவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள பல கட்சிகள் தவமாக (குறிப்பாக திமுக) இருந்தது என்றே சொல்லலாம். அந்த வாய்ப்புகளை தட்டிவிட்டு தன் ராஜதந்திர முடிவு என்று தனி கூட்டணிக்கு தலைமை ஏற்றது. ஆனால் அதில் வென்றது ஜெயலிலதாவின் ராஜதந்திரம் என்று தேர்தல் முடிவு தேமுதிகவுக்கு உணர்த்தியது. அன்று ஆரப்பித்தது தேமுதிகவின் வீழ்ச்சி.
மக்கள், தேமுதிகாவின் (விஜயகாந்தின்) மீது அதிக நம்பிக்கை வைத்தார்கள், அதன் விளைவாக எதிர்கட்சியாக அமர்த்தினார்கள். ஆனால், இன்று தேமுதிக மக்கள் மீது நம்பிக்கை வைக்காமல், தன் (பிரேமலதா) ராஜதந்திரதின் மீது நம்பிக்கை வைத்ததின் விளைவுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
அரசியலில் சில முடிவுகள் பெரும் வெற்றியை கொடுக்கும், அதே சமயத்தில் சில முடிவுகள் கட்சியை ஒன்றுமில்லாத நிலைக்கு தள்ளிவிடும் என்பதுற்கு இன்றைய தேமுதிகவே சிறந்த உதாரணம்.
ஜிகே வாசன் எப்படி இந்த வேட்பாளர் பட்டியலில் வந்தார் என்பதுதான் நம்மில் எழும் ஆயிரம் கேள்விகள். ஒருவேலை இது ஜிகே வாசனின் ராஜதந்திரமாக இருக்குமோ…
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்
அஃதறி கல்லா தவர்