கோவிட் – 19 – புதுச்சேரி முதல்வருக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள்
புதுச்சேரி முதல்வர் திரு. நாராயணசாமி அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள். கடந்த ஒரு மாதமாக அவரின் கீழ் புதுச்சேரி மாநிலம் கோவிட்-19 பாதிப்பு குறைந்து மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதில் அனைவருக்கும் நிம்மதி.
உயிர்க்கொல்லி நோய் கோவிட்-19 இந்தியாவில் பரவ ஆரம்பித்த நேரத்தில், தன்னுடைய நிர்வாக திறமையினால் அதிவிரைவாக செயல்பட்டு, அதே சமயத்தில் கடும் நடவடிக்கையினாலும் இன்று புதுச்சேரி கோவிட்-19 பாதிப்பு குறைந்த மாநிலமாக திகழ்கிறது.
புதுச்சேரியல் சில இடங்களில் கோவிட்-19 இருப்பதை கண்டறிந்த உடனே துரிதமாக செயல்பட்டு, அந்த இடத்தை பாதுகாப்பான இடமாக அறிவித்து இன்று கோவிட்-19 மற்ற இடங்களுக்கு பரவாமல் பாதுகாத்தார்கள். இன்றைய தேதியில் மூன்று நபர்கள் மட்டுமே கோவிட்-19னினால் பாதிப்படைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

முதல்வர் திரு நாராயணசாமியை பாராட்டுவதை போன்று சுகாதாரத்துறையினர், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் உழைப்பை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து அவர்களையும் பாராட்டுகிறோம். அவர்களின் உழைப்பினால் தான் இன்று நாம் நலமாக இருக்கிறாம் என்ற நன்றி உணர்வுடன்.
வேலன்று வென்றி தருவது மன்னவன்
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்
கோலதூஉங் கோடா தெனின்
தாஜூதீன்