கோவிட்-19 – மருத்துவர்களை காப்போம்!
கோவிட்-19, இந்த நோய் நம் கண்னுக்கு தெரியவில்லை என்றாலும், அதன் பாதிப்பு மிகவும் கொடுமையாக நமக்கு தெரிய ஆரம்பித்துள்ளது என்றால் அது மிகையாகாது. இந்த நோய் தொற்றினால் உடனடியாக மரணம் இல்லை என்றாலும், இந்த நோய் நம்மிடம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகவும் அதிகம். இதுவரை இந்த உலகம் கண்டிராத ஒரு வித பயத்தை ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
சுமார் 75% பேர் எப்போழுதும் இல்லாத அளவுக்கு தங்களின் வீட்டிலேயே முடங்கிக் கிடைக்கிறார்கள் மீதியிருக்கும், 25% பேர் இதன் பாதிப்பை அறியாமல் இருக்கிறார்கள். இது அவர்களுக்கு மட்டும் பாதிப்பை கொடுக்காது, அவர்களை சார்ந்துள்ள அவர்களின் குடும்பம், காவல்துறை மற்றும் மருத்துவர்கள் என அனைவரையும் பாதிக்கும் என்று இப்பொழுதும் தெரியாமல் இருப்பதுதான் வேதனையை கொடுக்கிறது.
இந்த நோய் தொற்று, ஏழை மற்றும் பணக்காரன் என்று பாரபட்சம் காட்டாமல் தன்னுடைய ருத்ர தண்டவத்தை காட்டிக்கொண்டிருக்கிறது. இதில் மிகவும் கொடுமையான ஒன்று என்னவென்றால் இந்த நோயை குணப்படுத்தும் மருத்துவரையும் இந்த கோவிட்-19 விட்டுவைக்கவில்லை. இன்று சென்னையில் ஒரு மருத்துவர் இந்த நோயினால் மரணமடைந்தார் என்ற செய்தி, அனைவருக்கும் பயத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. அதுவும் குறிப்பாக மருத்துவர்களையும் மற்றும் அவர்களை சார்ந்து இருப்பவர்களையும். (இந்த மருத்துவருக்கு எப்படி கோவிட்-19 நோய் தொற்று வந்தது என்று தெரியவில்லை)
இந்த மருத்துவரின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு என்னவென்று ஒரு நிமிடம் நாம் நினைத்தாலே நம் கண்கள் கலங்குகிறது.
நம்மால் மட்டுமே, இது போன்று இன்னொரு மருத்துவரை பறிகொடுக்காமல் இருக்கமுடியும். ஆம், நாம் நம் குடும்பத்துடன் வீட்டின்னுள்ளேயே இருப்பது தான், நாம் அவர்களுக்கு செய்யும் நன்றி கடன்.
நமக்கு சுயகட்டுப்பாடு இல்லையென்றால், அதனால் ஏற்படும் பாதிப்பு நம்மை விட நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு தான் பாதிப்பு அதிகம். சிந்திப்போம், அரசு சொல்லும் வழிமுறைகளை கடைபிடிப்போம்.
தாஜூதீன்
தனிமனித ஒழுக்கமும் ஒத்துழைப்பும் இல்லாமல் இந்த கண்ணுக்கு தெரியாத எதிரியோடு போரிடுவது என்பது கடினமானது.
LikeLike
☹️
LikeLike
Super sir…👍👍👍
LikeLike
Excellent awareness post…
LikeLike