கோவிட்-19 – எச்சரிக்கையுடன் கூடிய ஓர் வேண்டுகோள்
03-05-2020
தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கோவிட்-19 நோயினால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்படியிருந்தும் அரசுகள் (மத்திய மற்றும் மாநில) தாங்கள் பிறப்பித்த ஊரடங்கை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக்கொள்வது என்கின்ற முடிவினை எடுத்துள்ளார்கள்.
இந்த முடிவு மிகவும் ஆபத்தானது மட்டுமில்லாமல் இதுவரை நாம் காப்பாற்றிய அனைத்து முயற்சிகளையும் வீணாக்குவதற்க்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
அரசுகளுக்கு இப்போழுது இரண்டு மிக முக்கிய பிரச்சனை, ஒன்று மக்களை கோவிட்-19யில் இருந்து காப்பாற்றுவது மற்றொன்று நாட்டின் பொருளாதார பிரச்சனையை சமாளிப்பது. இந்த இரண்டு பிரச்சனையில், அரசுகள் என்ன செய்யவதன்று அறியாமல், பொருளாதாரத்தை முன்னிறுத்தி தவறான முடிவுகளை எடுக்கிறது என்றே தோன்றுகிறது.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அமெரிக்காவை தான் சொல்லவேண்டும். அமெரிக்க அரசின் அலட்சியத்தினாலும், பொருளாதாரத்தை முன்னிறுத்தினத்தின் பாதகத்தை என்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் வளர்ந்த நாடு என்றாலும் அவர்களால் கோவிட்-19யை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுகிறார்கள். உலகத்தில் அதிக உயிரிழப்பு அமெரிக்காவில் தான் இருக்கிறது.
இந்தப் படிப்பினையை நாம் எடுத்துக்கொண்டு இன்னும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கோவிட்-19க்கு தனித்து இருப்பது தான் ஒரே தீர்வு என்று இருக்கும் வரை நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அரசுகள் ஊரடங்கை தளர்த்தினாலும், நாம் முக்கியமான தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருவது நமக்கும் நம் குடும்பத்திற்கும் நல்லது.
குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கு இது ரமலான் காலங்கள், இந்த காலத்தில் நாம் கூட்டு வழிபாடுகளை தவிர்த்து, தனித்து மற்றும் தங்களின் வீடுகளில் வழிபாடுகளை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். இதனை போன்று ரமலான் பண்டிகைக்கு என்று தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று கடைகளுக்கு செல்வது மிகவும் அபாயகரமான ஒன்றாக மாறிவிடும். இந்த பண்டிகைக்கு வெளியே சென்று பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து, பண்டிகையை மனநிறைவுடன் வீட்டிலேயே கொண்டாடுவோம்.
இப்போழுது முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை கவனத்தில் வைத்துக்கொண்டு நம் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்வோம்.
வீட்டிலேயே இருப்போம், பாதுகாப்பாக இருப்போம், நம் குடும்பத்தையும், நாட்டையும் காப்போம்.
தாஜூதீன்
👍
LikeLike