நினைவுகள் – 6 : ஈகைத் திருநாள் தொழுகை
25-05-2020
வருடம் வருடம் ஈகைத் திருநாள் கொண்டாடம் வரும், ஆனால் இன்று கொண்டாடிய ஈகைத் திருநாள் மிகவும் ஒரு தனித்துவமானது என்றால் அது மிகையாகாது. ஆம் இன்று அனைத்து இஸ்லாமியர்களும் அவர்களுடைய வீட்டிலேயே தங்களின் பெருநாள் தொழுகைகளை அமைத்துக் கொண்டார்கள், அதன்படி நாங்களும் எங்களின் வீட்டிலேயே பெருநாள் தொழுகையை ஏற்பாடு செய்தோம்.
மிகவும் முக்கியமாக என்னுடயை பாவா (அப்பா) அவர்கள் இமாமாக (தொழுகை வைப்பவர்) இருப்பதற்க்கு சம்மதம் தெரிவித்தார். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, அதே சமயத்தில் ஆச்சரியமாகவும் இருந்தது. ஏனென்றால், இதுவரை என்னுடைய பாவா அவர்கள் இமாமக இருந்து தொழுகையை நடத்தியதில்லை என்பதனால்.

இன்று எங்கள் பாவா மிகவும் அருமையாக பெருநாள் தொழுகையை நடத்திவைத்தார் என்பதில் எங்களுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. இன்று பெருநாள் தொழுகையை பள்ளிவாசலில் தொழுவில்லை என்ற குறையோதும் இல்லாமல் எங்களுக்கு தொழுகையை நடத்திவைத்தார்.
இந்த கோவிட்-19யின், பல பாதிப்புகளை கொடுத்துக்கொண்டு இருந்தாலும், இதனை போன்ற ஒரு சில நினைவுகளை நமக்கு கொடுத்துக்கொண்டு இருக்கத்தான் செய்கிறது.
தாஜூதீன்
Maasha Allah!!
LikeLike
Macha Allah
LikeLike