தேர்தல் வருகிறது – நில் கவனி செல்
அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் வருகிறது என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் அநேகமாக அனைவருக்கும் தெரிய ஆரம்பித்துள்ளது. பல மாடல்கள் தமிழ்நாட்டுக்கு வந்துக் கொண்டிருக்கிறது.
வரும் சட்டசபை தேர்தல் அனைத்துக் கட்சிக்கும் மிகவும் சவாலாக இருக்கும். அதுவும் இந்த தேர்தல் மதம், ஜாதி மற்றும் வெறுப்பு உணர்வுகளை மையமாக வைத்து நடக்கும் என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் நன்றாக தெரிகிறது என்பதுதான் உண்மை.
அண்மையில், செய்தி ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் என்பது மிகவும் கவனமாக அதே சமயத்தில் தெளிவான திட்டமிடல் இருக்கும் என்பதுதான் அனைவரது கருத்து. அவர்களின் மீது ஒரு கட்சியின் சார்பு முத்திரை குத்துவதன் மூலம், அவர்களை அந்த கட்சியின் மீதான அவர்களின் கருத்தை எப்போதும் ஒரு சந்தேகப் பார்வை ஏற்படுத்துவதுதான் அவர்களின் முக்கிய குறிக்கோள். இதன் மூலம் ஊடகவியலாளர்களை எப்போதும் ஒருவித அச்சத்தில் வைத்திருப்பது தான் அவர்களின் நோக்கம். இதில் அவர்கள் வென்றார்களா என்பது ஆயிரம் கேள்விகள் இருக்கிறது. இவர்களின் இந்த முயற்சியை புறக்கணித்துவிட்டு அனைத்து ஊடகவியலாளர்களும் மிகவும் நிதானமாக கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.
அடுத்த சில மாதங்களுக்கு இப்படியான வெறுப்புணர்வுகள் அதிகமாகிக்கொண்டே தான் இருக்கும். இதில் நாம் அனைவரும் நின்று நிதானமா யோசித்து செல்லவேண்டும். அவர்களின் வெறுப்புணர்களுக்கு ஆட் கொள்ளாமல் இருந்தாலே, அவர்களின் இப்படியான முயற்சியை கைவிட செய்யும்.
நயனில னென்பது சொல்லும் பயனில
பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.
பாரித் துரைக்கும் உரை