நினைவுகள் 7 – நண்பர் செல்வமணி





பள்ளிப்படிப்பு காலத்தில் தொடங்குகின்ற நட்புதான் நீண்டகால நண்பர்களாக இருப்பார்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால் நானும், நண்பர் செல்வமணியும் ஒன்றாக ஒரே பள்ளியில் படிக்கவில்லை, ஒன்றாக இருவரும் எங்கும் வேலை செய்ததும் இல்லை, ஆனாலும் நாங்கள் நீண்ட காலமாக நண்பர்களாக இருக்கிறோம் என்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. நீண்ட காலம் என்றால் 25 வருடங்களுக்கும் மேல்.
எங்கிருந்து, எப்பொழுது எங்கள் நட்பு தொடங்கியது என்று நினைத்து பார்க்கையில், எங்கள் நட்பு எங்கிருந்து தொடங்கியது என்று என் நினைவில் இல்லை. செல்வமணி என்னைவிட இரண்டு வயது மூத்தவன், ஆகையினால் தான் எங்களுக்கு இடையில் பள்ளி நட்பு இல்லை. ஒரே ஒரு ஒற்றுமை நாங்கள் இருவரும் திருக்கனூர் என்கின்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதுதான்.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில், திருக்கனூரில் உள்ள என் வீட்டில் மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்போம். நான், எங்கள் வீட்டின் மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டிருப்பேன், அவன் என்னெதிரில் அமர்ந்துக் கொண்டிருப்பான். ரோட்டில் போய்க்கொண்டு இருப்பவர்கள் எங்களை பார்த்துக்கொண்டே போவார்கள், வருவார்கள். எங்களுக்கு தெரிந்தவர்கள் எங்களை பார்த்து போதும் பா, இன்னுமா பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லிக்கொண்டு போவார்கள். அதிலும் குறிப்பாக என்னுடைய அப்பாவின் பெயரில் இருக்கும் சம்சு மாமா அவர்கள் எங்களைப் பார்த்து இந்த வார்த்தையை சொல்லிக் கொண்டே செல்வார். அவ்வளவு நேரம் (வெட்டியாக) பேசிக்கொண்டிருப்போம்.
திருக்கனூரில், எங்கள் இருவருக்கும் பொழுதுபோக்கு என்று சொல்ல வேண்டுமென்றால்.
- ஒன்று, பேசிக்கொண்டிருப்பது (கண்டிப்பா வெட்டியாக தான் பேசியிருப்போம்)
- இரண்டு, சரஸ்வதி தியேட்டரில் படம் பார்ப்பது.
- மூன்று திருக்கனூரில் இருந்து மண்ணாடிப்பட்டு ஊர் வரை நடந்து போய் வருவது
- நான்காவது, நண்பர் நிஜாம் அவர்களின் பம்புசெட்டில் மணிக்கணக்காக குளிப்பது
இதுதான் எங்களின் அதிகபட்சமான பொழுதுபோக்கு.
எங்கள் ஊரில் எங்களின் நட்பு அனைவருக்கும் பரிட்சயம். ஆம், செல்வராஜ் பையன் செல்வமணி, சும்சுதீன் பையன் தாஜூதீன் இருவரும் ரொம்ப நல்ல பசங்க என்று பெயர் வாங்கிய நட்பு எங்கள் நட்பு (இப்படி சொல்லி சொல்லியே எங்களை நல்லவர்களாக வளர்த்த ஊருக்கு மிக்க நன்றி).
மிகவும் அழகாக பென்சில் ஓவியம் வரைவதில் திறமை பெற்றவன் எனது நண்பன் செல்வமணி. நான் வேலைக்கு புதுச்சேரியை விட்டு எங்கும் சென்றது இல்லை, ஆனால் செல்வமணி தான் வேலை செய்த நிறுவனத்தின் சார்பாக பல ஊர்களில் வேலை பார்த்த (புதுவை, காரைக்கால், கவுகாத்தி (அசாம்) மற்றும் இலங்கை) அனுபவம் உள்ளவன். இன்று முதலாளியாக தனியாக நிறுவனம் நடத்திக்கொண்டிருக்கிறார், கூடவே விவசாயம். அவனுடைய இந்த முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
எங்களுக்கு இடையில் பல சுவாரசியமான நினைவுகள் இருந்தாலும், செல்வமணியின் இரண்டு மிக முக்கியமான சம்பவங்கள், பசு மரத்தில் அடித்த ஆணி போன்று என் நினைவில் இருக்கிறது. ஒன்று விழுப்புரம் ஏழுமலையான் பாலிடெக்னிக்கில் அவன் படிக்கும்போழுது நடந்தது மற்றொன்று காரைக்காலில் அவன் வேலை செய்யும்போழுது நடந்தது. இந்த இரண்டு சம்பவங்களை விரிவாக சொல்ல வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். அதன் பின் விளைவுகளை நினைத்து பார்த்து தவிர்ப்பது நன்று என்று நினைத்து தவிர்த்துவிட்டேன். (நாண்பா, இப்போழுது நீ வீட்டில் மாட்டிக்கொண்டாய். மனைவியிடம் உதை வாங்கிய உடன் தெரிவிக்கவும்)
தாஜூதீன்
திருக்குறள்
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு
பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு
நினைவுகள்
நினைவுகள் – 6 : ஈகைத் திருநாள் தொழுகை
25-05-2020 வருடம் வருடம் ஈகைத் திருநாள் கொண்டாடம் வரும், ஆனால் இன்று கொண்டாடிய ஈகைத் திருநாள் மிகவும் ஒரு தனித்துவமானது என்றால் அது மிகையாகாது. ஆம் இன்று அனைத்து இஸ்லாமியர்களும் அவர்களுடைய வீட்டிலேயே தங்களின் பெருநாள் தொழுகைகளை அமைத்துக் கொண்டார்கள், அதன்படி நாங்களும் எங்களின் வீட்டிலேயே பெருநாள் தொழுகையை ஏற்பாடு செய்தோம். மிகவும் முக்கியமாக என்னுடயை பாவா (அப்பா) அவர்கள் இமாமாக (தொழுகை வைப்பவர்) இருப்பதற்க்கு சம்மதம் தெரிவித்தார். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, அதே…
நினைவுகள் 5 – நசிமுதீன்
03-02-2020 இன்று (03/02/2020) பிறந்த நாள் கொண்டாடும் நசிமுதீனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். ஞாயிற்றுக்கிழமை (03/02/2008) மதியம், சுமார் 12 மணியளவில் என்னுடைய மாமியாரிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு, “பாத்திமாவுக்கு பிரசவ வலி போன்று இருக்கிறது, நாங்கள் MHக்கு (புதுச்சேரி அரசு பெரிய மருத்துவமனைக்கு) போகிறோம், நீங்கள் சீக்கிரம் வந்து விடுங்கள்” என்று அவர்களுக்கே உண்டான பதட்டத்துடன் சொன்னார்கள். நான் என்னுடைய அம்மாவிடம் இதனை சொல்லும்பொழுது, இப்பொழுது தான் எட்டு மாதம் முடியப் போகிறது, அதற்குள்…
நினைவுகள் 4 – சிறு விவசாயி
24-06-2018 புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருக்கனூர் என்கிற கிராமம் தான் என்னுடைய சொந்த ஊர். எங்கள் குடும்பம் சிறிய குடும்பம், சிறிய குடும்பம் போன்று எங்களுக்குச் சிறிய அளவு விவசாயம் நிலம் இருக்கிறது. என்னுடைய தாத்தாவுக்கு விவசாயம் தான் முதன்மையான தொழில் என்று அப்பா சொல்லி கேட்டு இருக்கிறேன். ஆனால் என்னுடைய அப்பாவுக்கு விவசாயம் முதன்மை தொழில் இல்லை. அவர்கள் அரசு வேலையில் இருந்ததனால் தாத்தாவுக்கு பிறகு விவசாயம் முதன்மையில் இருந்து இரண்டாம் இடத்துக்கு போயிற்று. இருந்தும், என்னுடைய…
தாஜூதீன் செல்வமணி சிவமணி மூவ௫ம் Computer படிப்பு நிஜாமுதீன் மாடியில் இருந்த நி௫வனத்தில் படித்தோம் அப்போது தான் நட்பு ஆழமாகியது
வாத்தியாரோட மின் விசிறிகள் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு நான் அதை என் வீட்டில் ஓட விட்டு இ௫ந்தேன் ஞாபகம் இருக்கிறதா ஹ ஹ ஹா
😂😂😂😂😂😂
LikeLiked by 1 person
When i read this story with this photos, i felt that real situation now, i have laughed also…..superb sir….👌👌👍👍👏
LikeLike
Thank you very much
LikeLike
உங்கள் நட்பு இறுதிமூச்சு வரை தொடர வாழ்த்துக்கள்
LikeLiked by 1 person
I wish to continue your friendship till ur life and pray to god foe the same…. Heartly wishes…
LikeLike
My best wishes to your ever lasting friendship.
LikeLike
Happy Friendship ship day wishes, Thaj!!!
LikeLike