இரண்டு ஆளுமைகள் – மாலிக் அமீர்சாப் மற்றும் ஹனஸ் பாய்
29-08-2020
கடந்த இரண்டு வாரங்களில், இரண்டு ஆளுமைகளின் மரணங்கள், திருக்கனூர் கிராமத்தையே மிகவும் சோகத்தில் ஆழ்தியிருக்கிறது.
ஒன்று, அமீர்சாப் என்று அழைக்கப்படும் மாலிக் சாப் அவர்களின் மரணம். இரண்டு என்னுடைய நண்பர் நிசாம் அவர்களின் அண்ணன் ஹனஸ் பாய் (அல்லாபிச்சை) அவர்களின் மரணம். இந்த இருவரின் மரணம் நம்மை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மாலிக் அமீர்சாப் அவர்களுக்கும் எனக்கும் இருக்கும் உறவு அழகானது. எப்போழுது திருக்கனூருக்கு சென்றாலும், என்னிடம் அன்பாக நலம் விசாரிப்பார்கள். தாஜ் எப்படி இருக்கிறாய், அத்தா (அப்பா) எப்படி இருக்கிறார் என்பார்கள். அதே கம்பெனியில் தான் வேலை செய்கிறேனா என்பதை உறுதி செய்து கொள்வார். அடுத்து அவர் கேட்கும் கேள்வி, ஒரு மூன்று நாள் ஜமாத்துக்கு உன்னுடைய நேரம் கொடுப்பா என்பார். இதுதான் எனக்கும் அமீர்சாப் அவர்களுக்கும் நடக்கும் அனேகமான உரையாடல். அவர்கள் சொல்லி நிறைய தடவை ஜமாத்துக்கு சென்று இருக்கிறேன். இன்று அவர்கள் இல்லை என்பதை நினைதாலே ஒருவித சோகம் சூழ்ந்துகொள்கிறது.
பாய் (அண்ணன்) எப்படி இருக்கிறீர்கள் என்று சொன்னவுடம், நல்லா இருக்கிறேன், நீ எப்படி இருக்கிறாய் என்று உரிமையுடன் கேட்பார். சபைகளில் ஹனஸ் பாய் மிகவும் கம்பீரமாக இருப்பார்கள். ஒரு சிலர் மட்டுமே ஊர்களின் அடையாளமாக இருப்பார்கள். அப்படி அடையாளமாக இருப்பர்களில் ஒருவராக இருந்தவர் ஹனஸ் பாய். பாய்யுடன் ஜமாத் செல்வது என்றாலே அனைவரும் மகிழ்சியடைவர்கள்.

இந்த இருவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும், இவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் எங்களுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தாஜூதீன்
Inna lillahi wa Inna ilaihi rajihoon
ya Allah evenga eruvarakum melana sorgathai kodupayaga
LikeLike
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.
LikeLike
Rest In Peace 😔
LikeLike
Inna lillahi va inna Ilaihi rajeoon
Allah Melania sorkam kodupanaga aameen
LikeLike
Inna lillahi wa Inna ilaihi rajvoon
LikeLike