சவரன் கோல்டு பாண்டு (Sovereign Gold Bonds) – தங்க சேமிப்புப் பத்திர முதலீடு திட்டம்
மத்திய அரசின் 6-ம் கட்ட தங்க சேமிப்புப் பத்திர வெளியீடு வரும் திங்கள் (31-08-2020) முதல் தொடங்கி வெள்ளியென்று (04-09-2020) முடிகிறது.
தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 5,117 என மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. மின்னனு மூலம் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு கிராம் ஒன்றிற்கு ரூ. 50 தள்ளுபடி செய்து ரூ. 5,067 என்ற விலைககு ஒரு கிராம் சேமிப்புப்பத்திரம் கிடைக்கும்.
இந்த திட்டம், திங்கள் (31-08-2020) தொடங்கி வெள்ளியன்று (04-09-2020) முடிவடைகிறது. ஆகையினால் இந்த திட்டத்தில் முதலீடு செய்யவிரும்புவர் இந்த நாட்களுக்குள் முதலீடு செய்யலாம்.

முக்கிய அம்சங்கள்
- இந்த திட்டம், இந்திய அரசு சார்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியீடு
- இந்த முதலீட்டில் ஒரு கிராம் முதல் வாங்களாம். தனிநபர்கள் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம்
- 8 வருட காலத்திற்குகான பத்திரம்
- முதலீடு செய்த பணத்திற்கு 2.5% நிலையான வட்டி கொடுக்கிறார்கள்.
தங்க சேமிப்புப் பத்திர்த்தை, வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படும்
தாஜூதீன்