தோனி – போராடும் தலைவன்
கிரிக்கெட்டில் தோனி என்றாலே வெற்றி, அதுவும் கடைசி ஓவரில் வெற்றியாக மாற்றும் திறமையே அனைவருக்கும் பரிச்சயமானது.
துபாயில் நடத்துக் கொண்டிருக்கும் IPL-2020யில், Chennai Super Kings (CSK) முதல் வெற்றிக்குப் பிறகு, தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியையே அடைந்துள்ளது. இந்த தோல்விகளினால், பலரது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார் தோனி.
குறிப்பாக, எப்போதும் தோனியின் தோல்வியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கம்பீர் மற்றும் சேவாக் போன்றவர்கள், தோனியின் இந்த தோல்வியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கடுமையான விமர்சனங்களை தோனியின் மீது கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று நடக்கும், போட்டியில் CSKவுக்கு ஒரு வெற்றி தேவை, அதுவும் தோனிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமானது. எப்போதும் போல, தன் மீது வைக்கும் விமர்சனங்களை தன் திறமையினால் பதில் சொல்லும் தோனி, இன்று நடக்கும் போட்டியின் மூலம் பதில் சொல்வார் என்று அனைவரும் போல் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்.
தாஜூதீன்
Yes today confirm Win panniya again….
LikeLike
We are expecting from this moment 👍
LikeLike