நினைவுகள் 8 – தேவர் மகன்
28 வருடங்களுக்கு முன், தீபாவளி திருநாளில், புதுச்சேரியில் உள்ள பாலாஜி தியேட்டரில் (1992ஆம் ஆண்டில்) கமல்ஹாசனின் தேவர் மகன் படம் வெளியானது. அந்த படத்தை முதல் நாள், முதல் காட்சியில் பார்த்தது இன்றும் நினைவில் வந்து போகிறது.
தீபாவளி நாட்களில் வெளியாகும் கமல் மற்றும் ரஜினி படங்களை முதல் நாளே பார்ப்பது என்பது ஒருவிதமான மகிழ்ச்சியை கொடுக்கும். முதல் நாள் தியேட்டரில் டிக்கெட் வாங்குவது என்பது எவ்வளவு எளிதல்லை. அதற்கென்று சிலர் இருப்பார்கள், அவர்களிடம் முன்னரே சொல்லி வைத்து, முதல் நாள் இரவு, நேரில் சென்று டிக்கெட்டை அவர்களிடமிருந்து வாங்கவேண்டும் (அவர்கள்தான் அப்போழுது Big Boss). முதல்நாள் டிக்கெட்டு கைக்கு வந்தவுடன் வரும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அதுவும் கமல் படம் என்றால், இரட்டிப்பு மகிழ்ச்சி.
பாலாஜி தியாட்டரில் கமலுக்கு வைத்திருந்த கட்அவுட் மிகவும் அருமையாக இருந்தது. அப்போதெல்லாம் (கமல் மற்றும் ரஜினி) இவர்களில் யாருக்கு பெரிய கட்அவுட் வைப்பது என்று ரசிகர்களிடம் போட்டியே ஏற்படும். இதில், 1992 வருடம் தேவர் மகன் கமலே வென்றார்.

தேவர் மகன் படத்தின் கமலின் அறிமுகக் காட்சியே மிகவும் அருமையாக இருக்கும், இரயில் இருந்து இறங்கி (கருப்பு உடையுடன்) ஒரு ஆட்டம், தியேட்டரே அல்லோகலப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும். அப்படியான ஒரு அறிமுகம். படம் முழுவதும் கமலின் நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது. அந்த படம் பார்த்துவிட்டு வரும்போழுது முழு திருப்தியுடன் வந்தது நினைவில் இருக்கிறது.

கமல் படத்தை பொருத்தமட்டில் இரண்டு விதமான படங்களை கொடுப்பார், ஒன்று அனைவருக்குமான படம் மற்றொன்று ரசிகர்களுக்கான படம். தேவர் மகன் அனைவருக்குமான படம்.
சில படங்களை பார்த்து விட்டு வெளியே வரும்போது ரசிகர்களுக்குள் நடக்கும் உரையாடலிலே தெரிந்துவிடும் இது யாருக்கான படம் என்று. தலைவர் நடிப்பில் கலக்கியிருக்கிறார் என்று ஒரு ரசிகனும் அதற்கு மற்றொரு ரசிகன் அந்த காட்சியில் ….. என்று நடிப்பை பற்றியே பேசினால், அது ரசிகனுக்கான படம்.
இன்றும் கமலின் படங்கள் அவருடைய ரசிகனை ஏமாற்றியதில்லை. நடிகனாக…
தாஜுதீ்ன்
I like கமலஹாசன் speech always….
LikeLike
super
LikeLike
It’s a nice time travel
LikeLike