தென்னிந்தியாவின் இளவரசி – கொடைக்கானல்
ஒரு வருடத்திற்கு பிறகு, கடந்த வாரம் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு இரண்டு நாள் பயணமாக சென்று வந்தோம். தென்னிந்தியாவின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் என்றும் அனைவருக்கும் பிடித்த மலைப்பிரதேசம். எத்தனை தடவை போனாலும், ஒவ்வொரு முறையும், ஒரு புதிய இடத்துக்கு வந்த அனுபவம் தான் ஏற்படும். உன்னுடைய கார் பாண்டிச்சேரியில் இருந்து கொடைக்கானலுக்கு தானாக சென்றுவிடும் என்று விளையாட்டாக நண்பர்கள் சொல்வார்கள், அந்த அளவுக்கு கொடைக்கானல் என் மனதுக்கு பிடித்த இடங்களில் முதன்மையானது.
வெள்ளிக்கிழமை (18/12/2020), இரவு 8 30 மணியளவில் நாங்கள் பாண்டிச்சேரியில் இருந்து புறப்பட்டோம். அம்மா, இரவு சாப்பாடாக இட்லியை பார்சல் செய்து கொடுத்தார்கள். பயணங்களில் வீட்டு சாப்பாடு என்பது அமுதமாக இருக்கும், அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.
இரவு 11 00 மணியளவில், திருச்சி அருகில் ரோட்டோரத்தில் இரவு உணவை அருந்தினோம், உண்மையில் அருமையாக இருந்தது அதுவும் அம்மா கொடுத்தனுப்பிய அனைத்து இட்லிகளும் காலி அவ்வளவு பசி. இரவு உணவை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். சுமார், காலை 2 30 மணியளவில் வந்தலகுண்டு (கொடைக்கானல் மலை அடிவாரம்) சென்றடைந்தோம். இரவில் மலையேர வேண்டாம் என்று, சுமார் 2 மணி நேரம் காரிலேயே ஓய்வு எடுத்துக்கொண்டோம். கொடைக்கானல் மலையை விடியற்காலையில் பயணிக்க வேண்டும் என்பது எங்களின் ஆசை.


விடியற் காலை (19/12/2020) 4 30 மணியளவில் வந்தலகுண்டுவில் இருந்து கொடைக்கானலுக்கு புறப்பட்டோம், அந்த காலை நேரத்தில், கொடைக்கானல் மலையை, காரில் பயணிப்பது என்பது அவ்வளவு அருமையாக இருந்தது. காலை சுமார் 8 மணியளவில் கொடைக்கானல் வந்தடைத்தோம். நேரம் இருந்தால் கீழேயுள்ள வீடியோவை பார்க்கவும்.
கொடைக்கானலிருந்து 5 கிமீ அருகில் உள்ள வில்பட்டி என்கின்ற மலை கிராமதில் இருக்கும் விடுதியில் தங்கினோம், இந்த இடம் எங்களுக்கு மிகவும் பரிச்சயமான இடம். வில்பட்டி மிகவும் அழகிய விவசாய மலை கிராமம். குளிர் சுமாா் 10 ºC க்கும் குறைவாக இருந்தது. இரவு பயணக் களைப்பையும் மீறி, நமக்கு பிடித்த இடத்தில் தங்கியது, மகிழ்ச்சியாக இருந்தது.




சிறிது நேரம் ஒய்வுக்கு பிறகு, நாங்கள் கொடைக்கானலை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களை மேகங்கள் புடைசூழ சுற்றிப்பார்த்தோம். மேகக் கூட்டம் புடைசூழ காரில் பயணிப்பது ரம்மியமாக இருந்தது, அதே சமயத்தில் எதிரில் என்ன வாகனம் வருகிறது என்று தெரியாமல் காரில் பயணிப்பது ஒரு வித திகிலகவும் இருந்தது. முதல் நாள் இனிதே முடிந்தது. இரவு முழுவதும் பயணம் என்பதினால், வழக்கத்துக்கு மாறாக சிக்கிரமே இரவு தூக்கத்திற்கு சென்றோம். நல்ல குளிரில் நிம்மதியான தூக்கம்.







மறுநான், காலை (20/12/2020), 9 30 மணியளவில், வில்பட்டியில் இருந்து விடைபெற்றோம். கொடைக்கானல் ஏரியை கண்டுகளித்து விட்டு, அருகிலிருந்த பூங்காவுக்கு சென்று, புல்வெளியில் நசீம் மற்றும் தமீமுடன் சிறிது நேரம் குழந்தையாக மாறி அவர்களுடன் விளையாடினேன், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 12 30 மணியளவில் கொடைக்கானலில் இருந்து பாண்டிச்சேரிக்கு புறப்பட்டோம்.


இரண்டு நாள் பயணம் தான், ஆனால் உண்மையில் இந்தப் பயணம் மனதுக்கு புத்துணர்சியை கொடுத்தது.
முன்னரே முடிவு செய்துவைத்து போல், மதிய உணவாக, திண்டுக்கல்லில் உள்ள வேலு பிரியாணி உணவகத்திற்கு சென்றோம். சிரக சம்பாவில் செய்த அருமையான பிரியாணி. நல்ல பசியில் இருந்ததனால், எந்த ஒரு சிந்தனையும் இன்றி நன்றாக சாப்பிட்டோம். வேலு பிரியாணியுடன் இந்தப் பயணம் இனிதே முடிவுற்றது. வீட்டுக்கு இரவு 10 30 மணியளவில் வந்து சேர்ந்தோம்.
நன்றி, அடுத்த பயணத்தில் சந்திப்போம்…
தாஜூதீன்
👍👌
LikeLiked by 2 people
Well written blog. Keep writing
LikeLiked by 1 person
Thank you sir
LikeLike
Superb sir, that running picture in தமீம் super…
LikeLiked by 1 person
Super Sir, really feel enjoyed while I reading this… Thank you verymuch to share this with us sir.
LikeLike