புதுச்சேரியில் புதுமையான முயற்சி – Dragon Fruit விவசாயம்
விவசாயத்தில் யார் புதிய முயற்சியை செய்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என்பதை உண்மையாக்கி கொண்டிருக்கிறார், புதுவையை சேர்ந்த திரு. செல்வமணி அவர்கள். புதிய முயற்சியாக Dragon Fruit விவசாயத்தை முன்னேடுத்து புதுச்சேரி அருகில் உள்ள மண்ணாடிப்பட்டு கிராமத்தில் பயிரிட்டுள்ளார். இந்தப் பழத்தை வேறு யாரும் புதுவை மாநிலத்தில் பயிரிடவில்லை என்பது கூடுதல் சிறப்பு.



செல்வமணியிடம், ஒரு சில மணித்துளிகள் பேசினாலே நமக்கு ஒன்று தெளிவாக தெரிகிறது, இந்த Dragon Fruitயை தன் நிலத்தில் பயிரிடுவதற்கு முன், எவ்வளவு ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று. இதற்காக பல மாதங்கள் Dragon Fruitயின் தன்மைகள், இங்கு இருக்கும் சூழ்நிலையில் வளரும் விதம் என்று ஆராய்ந்து, இது கண்டிப்பாக வெற்றியடையும் என்று உறுதிப்படுத்திக் கொண்டுதான் இதனை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டுள்ளார்.
இந்தப் பயிருக்கா அவர் செய்து கொண்டிருக்கும் உடல் உழைப்பு மற்றும் முதலீடு மிக அதிகம். அது மட்டுமின்றி அவருக்கு ஆதரவாக தன் குடும்பம் மற்றும் சில நண்பர்கள் தவிர வேறு யாரும் இல்லை என்றாலும், அவர், அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையில் இந்த பதிய முயற்சியை செய்து கொண்டிருக்கிறார். இதில் வெற்றியடைய நாமும் அவரை மனமார வாழ்த்துவோம்.
இவரின் கடினமான இந்த புதிய விவசாய முயற்சி, சில வருடங்களுக்கு பிறகு பல விவசாயிகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
தாஜூதீன்
Super…all the best for his success….👍👌👍👌👍
LikeLiked by 1 person