Skip to content

பிரியாணியை தேடி ஒரு பயணம்

அசைவ உணவுப் பிரியர்களுக்கு,
எப்பொழுதும் முதன்மையான உணவு, பிரியாணி என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது.

பிரியாணியின் வரலாறு

பிரியாணி என்னும் சொல் வறுத்த என்ற பொருள் தரும் ‘பிர்யான்‘ என்னும் பாரசீகச் சொல்லிலிருந்து பிறந்தது என்று நம்பப்படுகிறது. பிரியாணி அரேபியர்களின் நாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வந்துருந்தாலும், பிரியாணியை நமக்கு தகுந்தாற் போன்று, நம் நாட்டியின் மசாலாக்களினால் மெருகேற்றி, இன்று பிரியாணியின் பிறப்பிடம் இந்தியா என்று சொல்லும் அளவுக்கு அதன் சுவை மற்றும் மணம் ஆகிய இரு முக்கிய கூறுகளை மாற்றியிருக்கிறோம்.

நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விருந்து என்றாலே பிரியாணி தான் முதன்மையான உணவாக இருக்கிறது. சுப நிகழ்ச்சியில் விருந்து சிறப்பாக இருக்கவேண்டும் என்றால் பிரியாணி கண்டிப்பாக இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. பிரியாணியை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம், அதிலும் சைவ உணவை உண்பவர்களும் வெஜிடபிள் பிரியாணி என்று பிரியாணியை பலதரபட்டவர்களுக்கும் ஏற்றார் போல் மாற்றி அனைவருக்குமான உணவாக மாற்றிய பெருமை நம்மையே சாரும்.

பிரியாணியின் வகைகள்

தென்னிந்தியாவில் பல வகையான பிரியாணிகள் இருக்கின்றது. ஊர்களை மையமாக வைத்தும், அரிசியை வைத்தும், திருமணங்கள் மற்றும் மதங்களை வைத்தும் பிரியாணியை வகைப்படுத்தலாம். இவைகளில் ஒவ்வொன்றுக்கும் அதன் தனித்தன்மையுடன் கூடிய சுவை மற்றும் மணம் கலந்திருக்கும்.

ஊர்கள்

ஊர்களை மையமாக வைத்து பிரியாணியை செல்ல வேண்டுமென்றால், ஹைதராபாத் பிரியாணி முதன்மையானது. நம் மாநிலத்தில், ஆம்பூர் மற்றும் திண்டுக்கல் பிரியாணி அனைவருக்கும் பரிச்சயமானது. இவ்வாராக, ஒவ்வொரு ஊர்களுக்கும் என்று தனிசுவை இருப்பது கூடுதல் சிறப்பு

அரிசி

அரிசியை வைத்து செய்யப்படும் பிரியாணியில், பாஸ்மதி அரிசியில் செய்யப்படும் பிரியாணிக்கு என்று தனி சுவை இருக்கும். இதனைப் போன்று சீரக சம்பா அரிசியில் செய்த பிரியாணிக்கு என்று தனி மணம் இருக்கும்.

திருமணங்கள் மற்றும் மதங்கள்

இஸ்லாமியர்களின் வீடுகளில் செய்யப்படும் பிரியாணி மற்றும் அவர்களின் திருமண விழாக்களில் செய்யப்படும் பிரியாணிக்கு என்று தனி சுவை மற்றும் மணம் இருக்கும்.

இவ்வளவு சிறப்பு பெற்ற பிரியாணி உணவை நாம் பல உணவகத்தில் சாப்பிட்டு இருப்போம். அவைகளில் எந்த உணவகத்தின் பிரியாணி மிகவும் சுவையாகவும், மணமாகவும் இருக்கிறது என்று

பிரியாணியை தேடி ஒரு பயணம்
என்கின்ற தலைப்பில், புதுவை மற்றும் தென்னிந்தியாவில் நமக்கு பிடித்த பிரியாணி உணவகத்தை பற்றி ஒவ்வொரு வாரமும் உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

அடுத்தவாரம், புதுவையில் உள்ள J.A. ஆற்காடு பிரியாணி உணவகம் பற்றிய ஒரு பார்வை.

தாஜூதீன்

6 Comments »

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

<span>%d</span> bloggers like this: