பிரியாணியை தேடி ஒரு பயணம் – ஜே.ஏ. ஆற்காடு பிரியாணி

பிரியாணியை தேடி ஒரு பயணத்தில் முதலில் நாம் சென்றது ஜே.ஏ. ஆற்காடு பிரியாணி. புதுச்சேரி முருகா தியோட்டர் எதிரில்யுள்ளது இந்த பிரியாணி கடை. இங்கு பிரியாணி முதன்மையான உணவாக இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது சிக்கன் தந்தூரி (Chicken Tandoori).
பாஸ்மதி அரிசியல் செய்யப்பட்ட பிரியாணி, இங்கு மட்டன் (Rs. 170), சிக்கன் (Rs. 100) மற்றும் பீப் (Rs. 100) பிரியாணிகள் கிடைக்கிறது. மட்டன் மற்றும் பீப் பிரியாணி சாப்பிடுவதற்கு நன்றாக இருந்தது. இஸ்லாமியர்களின் திருமணத்தில் செய்யப்படும் உணவை போன்று சுவையாக இருந்தது கூடுதல் சிறப்பு. பிரியாணியின் விலை அனைவருக்குமானதாக இருக்கிறது.

இந்த கடைக்கு வரும் பெரும்பாலானோர் தங்களுக்கு வேண்டிய பிரியாணியை வீட்டுக்கு பார்சல் வாங்கிக்கொண்டு போகிறார்கள். ஆகையினால், அங்கேயே சாப்பிடுபவர்களுக்கு தேவையான வசதிகள் குறைவாகவே இருக்கிறது. இத்தகையவற்றை சரி செய்தார்கள் என்றால், குடும்பத்தினருடன் சாப்பிட வருபவர்களுக்கு வசதியாக இருக்கும்.

தாஜூதீன்
Super sir, especially Country chick 🐤 briyani special taste in Arcot .
LikeLiked by 1 person
Taste was super in Arcot👌
LikeLiked by 1 person
nice
LikeLiked by 1 person
My favorite biriyani kadai…
LikeLike