Skip to content

வரலாற்றுச் சிறப்புவாய்ந்த 10 அறிவிப்புகள்

செப்டம்பர் 2021

தமிழ்நாடு சட்டமன்றத்தில்
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள்
அறிவித்தவைகளில் மிகவும் முக்கியமானவைகள்

தந்தை பெரியாரின் பிறந்தநாள் – சமூகநீதி நாள்

தமிழர் நலனே தன்னுடைய நலனெனக் கருதி இறுதிவரை தொண்டாற்றிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் ஆண்டுதோறும் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும்.

சாதிய ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைத்தனத்தை உதறித்தள்ள அந்நாளில் உறுதியேற்போம்! பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியட்டும்!

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு நினைவிடம்

களங்கண்ட துறைகளிலெல்லாம் வெற்றி!
சந்தித்த தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி!
நவீன தமிழ்நாட்டின் சிற்பி!
அரைநூற்றாண்டுகாலத் தலைப்புச்செய்தி!
என்றும் அண்ணாவின் அன்புத்தம்பி!
வரலாறாக வாழ்ந்த தமிழினத் தலைவர் கலைஞருக்கு அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும்!

தன்னையே தந்து தாய்த்தமிழ்நாட்டை உருவாக்கிய தமிழினத் தலைவர் கலைஞரின் அரும்பெரும் பணிகளை வருங்காலத் தலைமுறையும் அறியும்வண்ணம், அவரது நினைவிடம் அமைக்கப்படும்.

மூன்று #FarmLaws-களையும் ரத்துசெய்யக் கோரும் தீர்மானம்

மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரான ஒன்றிய பா.ஜ.க அரசின் மாநில உரிமைகளில் தலையிடுகிற – உழவர் நலனுக்கெதிரான மூன்று #FarmLaws-களையும் ரத்துசெய்யக் கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேறியது.

கழக அரசு உழவர்களைக் கண்ணில்வைத்துக் காக்கும்!

+2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கையை மேற்கொள்ளும் சட்டமுன்வடிம்

சமூகநீதியின் பிறப்பிடமாம் தமிழ்நாட்டில் சமவாய்ப்பை மறுத்து மாணவர்களின் உயிரைப் பறிக்கும் ஆட்கொல்லியாக #NEET இருக்கிறது; மாநிலப் பொதுசுகாதாரக் கட்டமைப்பை வலுவிழக்கச் செய்கிறது.இதற்கு முடிவுகட்டி, +2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கையை மேற்கொள்ளும் சட்டமுன்வடிவை அறிமுகம் செய்தார்.

நீட் எனும் பலிபீடத்தில் மற்றுமொரு மரணம்! கல்வியால் தகுதி வரட்டும்; தகுதி பெற்றால் மட்டுமே கல்வி எனும் அநீதி நீட் ஒழியட்டும்! நாளை நீட் நிரந்தர விலக்கு சட்ட மசோதா கொண்டு வருவோம்; #NEET-ஐ இந்தியத் துணைக்கண்டத்தின் பிரச்சினையாகக் கொண்டு செல்வோம்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு

ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. த. முருகேசன் அவர்கள் தலைமையிலான ஆணையம் பரிந்துரைத்தபடி, மருத்துவம் போன்றே, பிற இளநிலைத் தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டமுன்வடிவினை அறிமுகம் செய்தேன்.

#CAA2019-ஐ இரத்து செய்யக்கோரும் தீர்மானம்

இன – மத – மொழி ஒடுக்குமுறைகளால் அல்லல்படும் மக்கள் அடைக்கலம் தேடிவரும் மதச்சார்பற்ற மக்களாட்சி நாடு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் தாய்த்திருநாடு!

நம்பிவரும் மக்களுக்குக் குடியுரிமை வழங்க மதமும் இனமும் தடையாக இருக்கலாமா?#CAA2019-ஐ இரத்து செய்யக்கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

நகைக்கடன்கள் தள்ளுபடி

கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்தார்.

சமூகநீதிப் போராளிகளின் நினைவாகம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது நான் அளித்த வாக்குறுதியை யார் மறந்திருந்தாலும் நான் மறக்கவில்லை. அதன்படி, 1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பலியான சமூகநீதிப் போராளிகளின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 4 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும்.

முத்தமிழறிஞர் கலைஞர் சிலை

தந்தை பெரியார் விரும்பியபடியும், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வலியுறுத்தியபடியும் சென்னை அண்ணா சாலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் சிலை முன்பிருந்த இடத்திலேயே நீதிமன்றத் தீர்ப்புக்குட்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாவண்ணம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவித்தேன்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பணி ஆணை

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பணி ஆணை மூலம் தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கியிருக்கிறோம்.

3 Comments »

 1. 7.5% reservation for govt school students was already in place by AIADMK, it’s now a sticker job by DMK. Gold loan waiver is good, but the real people who will benifit is to be checked considering the past of DMK. All other announcement are only for the party and to create a fake history. Nothing actually useful for people.

  A govt which came to power only with lies. Danush died due to fake promise of NEET, CAA is not applicable of Indian citizens, farm law is a direct benifit for farmers and sidelines brokers or agents who loot higher commission.

  All the promise that they gave during campaign was lies… Bad times for Tamilnadu.

  Like

  • Yeah, with the release of 700 lifetime prisoners on the occasion of Anna’s birthday. They are running short of goons.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: